10 இலட்சம் ரூபா பெறுமதியான கடல் அட்டைகளை இலங்கைக்குப் படகில் கடத்தும் முயற்சி முறியடிப்பு!

(மது­ரங்­குளி நிருபர்)


மன்னார் வளை­குடா கடல் வழி­யாக இலங்­கைக்கு கடத்­த­வி­ருந்த பல இலட்சம் ரூபா  மதிப்­பி­லான  உயிர் உள்ள கடல் அட்­டை­க­ளுடன்  கடத்­தல்­காரர் ஒரு­வ­ரையும் தமிழ்­நாடு  மண்­டபம் மெரைன் பொலிஸார் கைது செய்­தனர்.

Sea-Cucumber-3

மன்னார் வளை­குடா கடல் வழி­யாக இலங்­கைக்குச் செல்லத் தயா­ரா­க­வுள்ள படகு ஒன்றில் தடை­செய்­யப்­பட்ட கடல் அட்­டைகள் கடத்த இருப்­ப­தாக பொலி­ஸா­ருக்கு கிடைத்த ரக­சிய தக­வ­லை­ய­டுத்து  மண்­டபம் மெரைன் பொலிஸார்  நடு­க்க­டலில் தீவிர சோதனை நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டனர். 

Sea-Cucumber

அப்­போது மண்­டபம் வடக்­கு­க­டற்­க­ரையில் சந்­தே­கத்­திற்­கி­ட­மான முறை­யில்­த­ரித்து நின்ற படகு ஒன்றை  விசா­ரித்த போது அந்த படகில் 300 கிலோ தடை செய்­யப்­பட்ட கடல் அட்­டைகளை மறைத்து வைத்­தி­ருந்­தமை தெரி­ய­வந்­தது.

 

இத­னை­ய­டுத்து பட­குடன் கடத்­தலில் ஈடு­பட்ட நபு ஒரு­வரையும் கைது செய்த மண்­டபம் மெரைன் டிபா­லிஸார் வழக்கு பதிவு செய்து விசா­ரணை மேற்­கொண்டு வரு­கின்­றனர். பறி­முதல் செய்­யப்­பட்ட  கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் பத்து  இலட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 56 times, 1 visits today)

Post Author: metro