16 வய­தான சிறு­மியை விப­சா­ரத்தில் ஈடு­ப­டுத்­திய சந்­தே­கத்தில் ஆட்டோ சாரதி பயி­க­மவில் கைது

(எஸ்.கே)

16 வய­தான  சிறு­மியை வர்த்­த­கர்­க­ளுக்கும், அரச உயர் அதி­கா­ரி­க­ளுக்கும் விற்­பனை செய்து வரு­வதை தொழி­லாகக் கொண்­டி­ருந்த முச்­சக்­க­ர­வண்டி சாரதி ஒரு­வரை பாணந்­துறை வலான மோசடி ஒழிப்புப் பிரி­வினர் நேற்று முன்­தினம் 9 ஆம் திகதி கைது செய்­துள்­ளனர். 

arrested-cuffவர்த்­த­க­ரைப்போல் மாறு­வே­ட­மிட்டுச் சென்ற பாணந்­துறை வலான மோசடி ஒழிப்பு பிரிவைச் சேர்ந்த அதி­காரி ஒரு­வ­ருக்கு பிய­கம பிர­தே­சத்தில் வைத்து 15,000 ரூபா­வுக்கு 16 வயது சிறு­மியை விற்­பனை செய்ய முயற்­சித்த போது சந்­தேக நப­ரான முச்­சக்­க­ர­வண்டி சாரதி கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். 

சந்­தேக நப­ரான முச்­சக்­க­ர­வண்டிச் சார­தியின் வண்­டியில் வந்த 16 வயது யுவ­தி­யி­டமும் பொலிஸார் வாக்­கு­மூலம் பெற்­றுள்­ளனர். 

சந்­தேக நபர் இந்த இளம் யுவ­தியை கடந்த ஒன்­றரை வருட கால­மாக பல்­வேறு நபர்­க­ளுக்கு 15,000 முதல் 20,000 ரூபா­வரை பெற்றுக்கொண்டு விப­சா­ரத்தில்  ஈடு­ப­டு­வ­தற்­காக வழங்கி வந்­துள்­ள­தாக விசா­ர­ணை­யின்­போது தெரிய வந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். 

இந்தச் சிறு­மியின்  பெற்­றோ­ரது கவ­லை­யீனம் கார­ண­மாக  இவர் பல்­வேறு நபர்­களின் கைக­ளுக்கு மாறி­யுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.  சாரதியை நீதி மன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

(Visited 101 times, 1 visits today)

Post Author: metro