மிஸ்கினின் துப்பறிவாளன்

அந்த காலத்­துல கூட சி.ஐ.டி கதை படங்கள் நிறைய வந்­தி­ருக்கு. ஆனா, முழுக்க முழுக்க துப்­ப­றியும் நிபு­ணரை வைத்து படம் வந்­த­தில்ல. சின்ன வய­சு­லே­ருந்து என் மன­சுக்­குள்ள இருந்த அந்த டிடக்டிவ் கெரக்­டர்தான் இப்போ கலியன் பூங்­குன்­றனா ‘துப்­ப­றி­வா­ளன்’ல வளர்ந்து நிக்­குறான் என பூரிக்­கிறார் மிஷ்கின்.

விஷால் படம்னா மாஸ், மிஷ்கின் படம்னா கிளாஸ்னு வரை­முறை இருக்கு. இதை எப்­படி ‘துப்­ப­றி­வாளன்’ உடைக்கும்?

ஏன் உடைக்­கணும். மாஸும் கிளாஸும் கலந்த படம்தான் இது. மாஸ், கிளாஸுங்­கி­ற­தெல்லாம் சில விமர்­ச­கர்கள் சொல்­லிக்­கி­றது. இதை அப்­படி பிரிச்சி பார்க்­கவும் வேணாம்னு நினைக்­குறேன்.

Untitled-1

சென்னை மாதி­ரி­யான மெட்ரோ சிட்­டி­யில இருக்­கிற ரசி­க­னுக்கும் இந்த படம் புரியும். கிரா­மத்­துல இருக்­கிற தியேட்டர் ரசி­க­னுக்கும் இந்தப் படம் புரியும். பிடிக்கும். துப்­ப­றியும் விஷா­லுக்கு ஒரு வழக்கு வருது. அதை கையில எடுக்­கும்­போது ஏகப்­பட்ட சிக்­கல்கள், ஏகப்­பட்ட கேள்­விகள். 

எல்­லாத்­தையும் தீர்த்து, விடைகள் தேடும்­போது ஆங்­காங்கே டுவிஸ்ட், சஸ்­பென்­ஸுன்னு பர­ப­ரப்­பான ஒரு த்ரில்லர் படமா இதை எடுத்­தி­ருக்கேன்.

பணத்­துக்­காக மனுஷன் என்­ன­வெல்லாம் கொடூர காரி­யங்கள் பண்­றா­னுங்­கி­றதை யதார்த்­தமா பதிவு பண்­ணி­யி­ருக்கேன். வெறும் ஆக்‌­ஷ­னுக்கு முக்­கி­யத்­துவம் தர்ற படம் இல்லை இது. பல­மான எமோஷன் படத்­துல இருக்கும். மனி­த­நே­யத்தை சொல்ற எமோ­ஷனா அது முழு படத்­தையும் தாங்கி நிக்கும்.

பிர­சன்னா இது­லேயும் வில்­லனா?
இல்லை. ‘அஞ்­சா­தே’ல யாரும் செய்யத் துணி­யாத ஒரு ரோலை அவர் பண்­ணினார். எனக்கு ரொம்­பவே பிடிச்ச நடிகர். இதுல ‘அஞ்­சா­தே’க்கு ஆப்­போ­ஸிட்டா அவ­ரோட கெரக்டர் இருக்கும். ரொம்ப நல்­ல­வனா இதுல வர்றார். விஷா­லுக்கு நண்­ப­ராக நடிச்­சி­ருக்கார்.

முதல்ல நடிக்க இருந்த ரகுல் பிரீத் சிங், அக்‌­ஷரா ஹாசன்னு ரெண்டு பேருமே நடிக்­கல. ஏன் என்­னாச்சு?

இதுல ரக­சியம் ஒண்ணும் இல்லை. கால்ஷீட் பிரச்சி­னைதான் காரணம். அக்‌­ஷ­ரா­வுக்கு வேற படமும் அதே நாட்­கள்ல ஷூட்டிங் பண்ண வேண்­டி­யி­ருந்­துச்சு. அத­னால அவங்­க­ளால இதுல நடிக்க முடி­யல. ரகுலும் தெலுங்­குல செம பிஸி. அவங்க டேட்ஸ் கிடைக்­கி­றதும் சிர­மமா இருந்­துச்சு.

அவங்­க­ளுக்கு பதிலா வந்­தி­ருக்­கிற அனு இமா­னுவேல், ஆண்ட்­ரியா. எப்­படி பண்ணி இருக்­காங்க?
அனு இமா­னுவேல் கெரக்­டரை ஒவ்­வொரு ரசி­கனும் விரும்­புவான். அந்தப் பொண்­ணுக்கு ரொம்­பவே எமோ­ஷ­ன­லான கெரக்டர். படத்­துல வர்ற ரொமான்டிக் பகு­திக்­குதான் அனு.

ஆனா, அதையும் தாண்டி எமோ­ஷ­னலா அந்த கெரக்டர் ரசி­கர்­களை ஈர்க்கும். மத்த படங்­கள்ல பார்த்த ஆண்ட்­ரி­யா­வுக்கும் இதுல பார்க்­கிற ஆண்ட்­ரி­யா­வுக்கும் பெரிய வித்­தி­யா­சத்தை பார்க்­கலாம்.

இதுல ரொம்­பவே அழ­கான, திமிரும் ஸ்டைலும் கலந்த ஆண்ட்­ரி­யாவை அறி­மு­கப்­ப­டுத்­துறேன். கெட்­ட­வங்க கூடவே இருக்­கிற ஒரு பொண்ணு. அவ­ளோட அணு­கு­மு­றை­களே அத­க­ளமா இருக்கும். 

வினய்யும் இருக்­கி­றாரே?
‘அவன்’ படத்­துல ஆறடி பூதமா வர்றான். என்னை சந்­திக்­கி­றப்போ உங்க படத்­துல நடிக்­கணும் சார்னு சொல்வான். இதுல நடிக்க கூப்­பிட்­டப்போ, ஓடி­வந்தான். பூதமா நீ நடிக்­கப்­போ­றேன்னு சொன்­னதும் கொஞ்­சமும் தயங்­கல. அவ­னுக்கு இருக்­கிற ெசாக்லெட் ஹீரோ இமேஜை இந்த கெரக்டர் எப்­படி திருப்பி போடப்­போ­கு­துன்னு பாருங்க. பாக்­யராஜ் சார் ரொம்­பவே பவர்ஃ­புல்­லான ரோல் பண்­ணி­யி­ருக்கார். அதுதான் படத்­தோட ஹைலைட்டா இருக்கும். 

நூற்­றாண்டு கொண்­டா­டுற நம்ம சினி­மால ‘துப்­ப­றி­வாளன்’ கதையே தமிழ் சினி­மா­வுக்கு புது­சுன்னு சொல்­லிக்­கிறோம். பென்­டசி கதை­க­ளையும் இங்கே அதிகம் பார்க்க முடி­யல. இது கற்­பனை வறட்­சியா? புது­மையை கையாள தயக்­கமா?

ரெண்டும் கிடை­யாது. பட்­ஜெட்தான். ெஹாலிவூட்ல அது மாதி­ரி­யான கதைகள் உரு­வா­கு­துன்னா, அதுக்­கான அவங்­க­ளோட வியா­பார வட்டம் பெரிசு. அதுக்­கேத்த மாதிரி செலவு பண்­றாங்க. நமது வியா­பார வட்டம் குறு­க­லா­னது. ஒரு பென்­டசி படம் எடுத்­தாலும் அவங்க கையா­ளுற தொழில்­நுட்­பத்தை நாம கையாள முடி­யாது.

அத­னால அந்த தரம் வராது. இந்த மாதிரி படங்­க­ளுக்கு ஹைடெக்­னா­ல­ஜிதான் படத்­தோட நம்­ப­கத்­தன்­மையை அதி­கப்­ப­டுத்தும். தரத்தை கூட்டும். அது இல்­லாம போகும்­போது, நம்­மால முடி­யுற வரைக்கும் எந்த மாதிரி புது­மை­யான கான்செப்ட் படங்கள் தர­மு­டி­யுமோ அது­போல தர்றோம். 

அதே சமயம் அங்கே நடக்­கிற குரூப் திரைக்­கதை அமைப்பு, இங்­கேயும் சாத்­தி­யம்­தானே?
கண்­டிப்பா சாத்­தியம் கிடை­யாது. ஏன்னா இங்கே திரைக்­கதை ஆசி­ரி­யர்­களே யாரும் கிடை­யாது. ஆனா ெஹாலி­வூட்ல தனியா திரைக்­கதை ஆசி­ரி­யர்கள் இருக்­கி­றாங்க.

நாவல் எழு­து­ற­வங்க, இலக்­கி­ய­வா­தி­களை திரைக்­கதை ஆசி­ரி­யர்­கள்னு சொல்ல முடி­யாது. ெஹாலி­வூட்­லேயே நாவல் ஆசி­ரி­யர்கள் சினி­மால ரொம்ப குறைவு. அங்கே திரைக்­க­தைக்­கான ஸ்கூல்ஸ் நிறைய இருக்கு. முறைப்­படி திரைக்­கதை எழுத பயிற்சி எடுத்­துட்டு வர்­றாங்க. திரைக்­கதை ஆசி­ரி­ய­ருக்கு எடிட்டிங் முக்­கி­யமா தெரிஞ்சு இருக்­கணும்.

உங்க ‘சவ­ரக்­கத்தி’ லேட்­டாக காரணம்?
நான் ரசிச்சு எழு­தின கதை. ரொம்ப விரும்பி நடிச்ச படம். படம் பார்த்த எல்­லோ­ருமே நல்லா இருக்­குன்னு சொல்­லிட்­டாங்க. வியா­பார விஷ­ய­மாத்தான் படம் நிக்­குது. சீக்­கி­ரமே வந்­துடும். எப்போ வந்­தாலும் ரசிகன் கொண்­டா­டுற படமா இது இருக்கும்.

இளையராஜாவுடன் மீண்டும் சேர்ந்து வேர்க் பண்ணலியே?
ராஜா சாரோட இசை, எனக்கு என் வீடு மாதிரி. அங்கே எப்போ வேணும்னாலும் போவேன்.

(Visited 74 times, 1 visits today)

Post Author: metro