தனி ஒருவராக ஓடி தகுதிபெற்ற மக்வாலா

sole-runner-in-200-m-makwalaஉலக மெய்­வல்­லுநர் போட்­டி­களில் பங்­கு­பற்றும் பொட்ஸ்­வா­னாவின் ஐசாக் மக்­வாலா தனி ஒரு­வ­ராக 200 மீற்றர் தகு­திகாண் ஓட்டப் போட்­டியில் பங்­கு­பற்றி அரை இறுதிப் போட்­டியில் பங்­கு­பற்ற தகு­தி­பெற்றார்.

உணவு நஞ்­சா­னதால் 48 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு போட்­டியில் பங்­கு­பற்ற முடி­யாது என அறி­விக்­கப்­பட்ட மக்­வாலா, திங்­க­ளன்று நடை­பெற்ற தகு­திகாண் ஓட்டப் போட்­டியில் பங்­கு­பற்­ற­வில்லை.

இதனை அடுத்து அவ­ரது நாட்டின் மெய்­வல்­லுநர் சங்கம் விடுத்த வேண்­டு­ கோ­ளுக்கு அமைய அவ­ரது தகு­தியை நிரூ­பிக்கும் பொருட்டு அவ­ருக்கு தனி­யாக 200 மீற்றர் ஓட்டப் போட்டி புத­னன்று நடத்­தப்­பட்­டது.

அப் போட்­டியை அவர் 20.20 செக்­கன்­களில் நிறைவு செய்தார். இதற்கு அமைய முத­லா­வது தகு­திகாண் போட்டி முடி­வு­களின் பிர­காரம் அமெ­ரிக்­காவின் ஐசய்யா யங் (20.19 செக்) என்­ப­வ­ருக்கு அடுத்­த­தாக மக்­வாலா இரண்டாம் இடத்தைப் பெற்றார். இதன் பிர­காரம் அரை இறு­தியில் பங்­கு­பற்­று­வ­தற்கு அவர் தகு­தி­பெற்றார். 

400 மீற்றர் ஓட்டப் போட்­டியில் தங்கப் பதக்கம் வென்ற தென் ஆபி­ரிக்­காவின் வேட் வென் நீக்­கேர்க்கும் அரை இறுதிப் போட்­டிக்கு தகு­தி­பெற்­றி­ருந்தார்.

ஆண்­க­ளுக்­கான 200 மீற்றர் அரை இறுதிப் போட்டி இலங்கை  நேரப்படி இன்று அதிகாலை 1.35 மணிக்கு நடைபெறவிருந்தது.
 

(Visited 48 times, 1 visits today)

Post Author: metro