80 கோடி டொலர் வசூலை கடந்தது ‘வொண்டர் வுமன்’

வொண்டர் வுமன் திரைப்­ப­டத்தின் வசூல் தொகை 80 கோடி டொலர்­களை (சுமார் 12,250  கோடி இலங்கை ரூபா) கடந்­துள்­ளது.

wonder-woman-gal-gadot-ultimate-edition-1024x681

பெண் சுப்­பர்­ஹீரோ கொமிக்ஸ் பாத்­தி­ர­மான வொண்டர் வுமனை அடிப்­ப­டை­யாகக் கொண்ட ’வொண்டர் வுமன்’ திரைப்­படம் கடந்த மே 15 ஆம் திகதி வெளியா­கி­யது.


பெற்றி ஜென்கின்ஸ் இயக்­கிய இத்­தி­ரைப்­ப­டத்தில் இஸ்­ரே­லிய முன்னாள் அழ­கு­ராணி கேல் கடோட் நடித்­தி­ருந்தார்.  


கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யுடன் உல­க­ளா­விய ரீதியில் 80 கோடி டொலர்­களை இப்­படம் வசூ­லித்த­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதில் 40 கோடி டொலர்கள் அமெ­ரிக்­காவில் வசூ­லிக்­கப்­பட்­டுள்­ளது.


வொண்டர் வுமன் 2 திரைப்­படம் 2019 டிசெம்பர் 13 ஆம் திகதி வெளியாகும் என இப்­ப­டத்தின் வெளியீட்டு நிறு­வ­ன­மான வோர்னர் பிரதர்ஸ் நிறு­வனம் அறி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.


வொண்டர் வுமன் திரைப்­ப­டத்தின் இரண்டாம் பாகத்­துக்­கான திரைக்­கதை தொடர்பில் இயக்­குநர் பெற்றி ஜென்கின்ஸ் ஏற்­கெ­னவே பணி­யாற்ற ஆரம்­பித்­து­விட்டார் என கடந்த மாதம் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 53 times, 1 visits today)

Post Author: metro