சண்டைக் காட்சிகளில் நானே நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர் – ஜாக்கி சான்

சண்டைக் காட்­சி­களில் டூப் இல்­லாமல் தானே நடிப்­பதை பார்க்­கவே ரசி­கர்கள் விரும்­பு­கி­றார்கள் என நடிகர் ஜாக்கி சான் கூறி­யுள்ளார்.

jackie-chan

63 வய­தான ஜாக்கி சான் தனது ஆக் ஷன் காட்­சி­களைப் பற்றி செவ்­வி­யொன்றில் பேசு­கையில், "எனது சண்டைக் காட்­சி­களை பெரும்­பாலும் நான் தான் செய்­கிறேன். அதைத்தான் ரசி­கர்கள் என்­னி­ட­மி­ருந்து எதிர்­பார்க்­கின்­றனர்.

 

ஒரு சில காட்­சி­களில் டூப் பயன்­ப­டுத்­து­கிறேன். ஆனால் 90 சத­வீ­தத்­துக்கும் அதி­க­மான சண்­டை­களில் நான்தான் இருக்­கிறேன்.


சண்டைக் காட்­சியில் நடிப்­பது எனக்கு எளி­தாக உள்­ளது. அதில் தான் நான் சிறப்­பாக செயல்­ப­டு­கிறேன். கண்­டிப்­பாக சில பிரத்தி­யேக உத்­திகள் மற்றும் கெமரா கோணங்­களின் உத­வியை நாடு­கிறேன். இருந்­தாலும் சண்டைக் காட்­சிகள் தான் எனக்கு எளிது.


எனது ஜேசி ஸ்டண்ட் டீம் 1975 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­ப­ட்டது. அவர்­க­ளுடன் தான் சண்டைக் காட்­சி­க­ளுக்­கான ஒத்­தி­கையைப் பார்ப்பேன்.

 

நாங்கள் பெரும்­பாலும் ஒன்­றாக நேரத்தை செல­வி­டுவோம். அவர்கள் எனது சகோ­த­ரர்­களைப் போல. எங்­க­ளுக்குள் சண்­டை­யிட்டுக் கொள்வோம்" என்றார்.


ஜாக்கி சான் தற்­போது ப்ளீடிங் ஸ்டீல் என்ற சீன படத்தில் நடித்தி வரு­கிறார். ஹாலி­வுட்டில், ஃபொரினர் என்ற படத்தில் நடித்துள்ளார். இது செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

(Visited 35 times, 1 visits today)