சமுர்த்தி உதவு தொகை வழங்கப்படாமையை கண்டித்து ஹட்டன் – நுவரெலிய வீதியில் பயனாளிகள் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன், தலவாக்கலை நிருபர்)

நுவ­ரெ­லியா பிர­தேச செய­ல­கத்­துக்கு உட்­பட்ட பகு­தி­களில் அர­சாங்­கத்தால் வழங்­கப்­படும் சமுர்த்தி உதவு தொகை  முறை­யாக வழங்­கப்­ப­ட­வில்லை  என தெரி­வித்து  வெள்­ளிக்­கி­ழமை லிந்­துலை – தல­வாக்­கலை நக­ர­ச­பைக்கு அரு­கா­மையில் ஹட்டன் -– நுவ­ரெ­லியா பிர­தான வீதியில் பய­னா­ளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு­பட்­டனர்.

 DSC07441

 

தங்­களின் பாதிப்பு தொடர்­பான விப­ரங்கள் உள்­ள­டக்­கப்­பட்ட பதா­தை­களை ஏந்­தி­ய­வாறு கோஷங்­களை எழுப்பி ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுத்­தனர்.   கடந்த அர­சாங்­கத்தில் வழங்­கப்­பட்ட கொடுப்ப­னவை நல்­லாட்சி அர­சாங்கம் நிறுத்­தி­யது ஏன் ? என்ற கேள்­வி­யையும் எழுப்­பினர்.


 தற்­போது சமுர்த்தி உதவு தொகை பெறும் சில பய­னா­ளி­க­ளுக்கு இந்த உதவு தொகையை உரிய வேளையில் வழங்­கா­மலும்  நிறுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் ஆர்ப்­பாட்­டத்தில் சமுர்த்தி பய­னா­ளிகள் தெரி­வித்­தனர்.

அத்­தோடு, நிறுத்­தப்­பட்­டுள்ள குறிப்­பிட்ட குறித்த தொகையை உட­ன­டி­யாக வழங்­கப்­ப­டாத பட்­சத்தில் தொடர்ச்­சி­யாக ஆர்ப்­பாட்­டத்தை மேற் கொள்ளவும் எதிர்ப்பினை வெளிப் படுத்தவும் தயாராக உள்ளதாக ஆர்ப் பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
 

(Visited 29 times, 1 visits today)

Post Author: metro