அகர்வூட் அறுவடை பயிற்சிகளை பெறுவதற்காக அசாமுக்கு விஜயம் செய்த சதாஹரித குழுவினர்

சதா­ஹ­ரித பிளாண்­டேஷன் லிமிடெட் நிறு­வ­னத்தின் தலைவர் சதீஷ் நவ­ரத்ன உட்­பட பிர­தி­நி­திகள், உலகில் வர்த்­தக ரீதி­யான வன­வி­யலில் நிலை­யான முத­லீ­டாக கரு­தப்­படும் அகர்வூட் மர வளர்ப்பு மற்றும் சந்­தைப்­ப­டுத்தல் தொடர்பில் அனு­பவ ரீதி­யான பயிற்­சி­களை பெறும் நோக்கில் அண்­மையில் அசாம் மாநி­லத்­திற்கு விஜயம் செய்­தி­ருந்­தனர்.

 

Sadaharitha-Assam-team


இந்­தி­யாவில் அகர்வூட் செய்­கைக்­கான தலை­ந­க­ர­மாக அசாம் காணப்­ப­டு­வ­துடன், இந்­திய நிபு­ணர்­க­ளி­ட­மி­ருந்து பெறப்­படும் விலை­யிடல், ஊழியர் பயிற்சி மற்றும் சந்தை வாய்ப்­பு­களை கண்­ட­றிதல் போன்ற மிகச்­சி­றந்த பயிற்­சி­க­ளி­னூ­டாக நிச்­ச­ய­மாக சதா­ஹ­ரித குழு­வினர் அனு­கூங்­களை பெற­வுள்­ளனர். அசாம் பிராந்­தி­ய­மா­னது வட­கி­ழக்கு இந்­தி­யாவின் நுழை வாயி­லா­கவும் தனது எல்­லையை பூட்டான் மற்றும் பங்­க­ளாதேஷ் நாடு­க­ளுடன் தொடர்­பு­ப­டுத்­தி­யுள்­ளது.


இந்த பயணம் குறித்து சதிஸ் நவ­ரத்ன தெரி­வித்­த­தா­வது, “இந்த பய­ணத்தின் மூல­மாக பய­ன­டைந்தோம். அசாமைச் சேர்ந்த அகர்வூட் வளர்ப்­பா­ளர்­க­ளுடன் பகிர்ந்துகொள்­ளப்­பட்ட சிறந்த நடை­மு­றை­களூ­டாக எமது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு கவர்ச்­சி­க­ர­மான முத­லீட்டு வாய்ப்­பு­களை வழங்­க­வுள்ளோம்” என்றார்.


இலங்கை பிர­நி­திகள் குழுவில் ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்தின் வன­வியல் மற்றும் சூழல் அறி­வியல் பீடத்தின் கலா­நிதி உபுல் சுப­சிங்க மற்றும் சதா­ஹ­ரித நிறு­வ­னத்தின் வன­வியல் ஆலோ­சகர் ஒரு­வரும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தனர். அவ­ரது ‘கிறினோப்ஸ் வல்லா: இலங்­கையில் சமீ­பத்தில் கண்­டெ­டுக்­கப்­பட்ட அகர்வூட் உற்­பத்­தி­யாகும் மரங்கள்’ எனும் கட்­டு­ரை­யா­னது இந்­திய அனைத்து அகர்வூட் வளர்ப்பு சங்­கத்தின் பத்­தி­ரி­கையில் வெளி­யா­கி­யி­ருந்­த­துடன், மரங்­களை கடத்தல் மற்றும் பெறு­ம­தி­யான மரங்­களை அழித்தல் தொடர்­பான பிரச்­சி­னைகள் குறித்து கவனம் செலுத்­தப்­பட்­டி­ருந்­தது.


கலா­நிதி உபுல் சுப­சிங்க இது தொடர்­பாக கூறு­கையில், ‘அகர்வூட் ரெசின் (பிசின்) உரு­வாக்கம் மற்றும் அதன் நிலைப்­பாடு தொடர்­பான சரி­யான அறி­வின்மை அதன் விஞ்­ஞான ரீதி­யான தலை­யீடு இன்­மை­யினால் அனைத்து அள­வி­லான மரங்­க­ளையும் வெட்­டு­வ­தற்கு, அத்­து­மீறி மரம் வெட்­டு­ப­வர்­க­ளுக்கு வழி­காட்­டு­கி­றது. இந்த செய­லா­னது இம்­மர இனத்தின் அழி­வுக்கு துணை போவ­தோடு இதன் நிலைப்­பாட்­டுக்கும் பெரும் சவா­லாக திகழ்­கி­றது. கடந்த காலங்­களில் அகர்வூட் மரத்தின் தேவை சர்­வ­தேச ரீதியில் அதி­க­ரித்­துள்­ளதால், அத்­து­மீ­றல்­களும் அதி­க­ரித்­துள்­ளது. இந்த அத்­து­மீ­ற­லா­னது, இந்த இனத்தின் அனைத்து வய­து­களின் நிலைப்­பாட்­டிற்கும் அச்­சு­றுத்­த­லாகி இவ்­வி­னத்தின் மறு உற்­பத்­தியை கணி­ச­மான அளவு குறைந்­துள்­ளது. தாழ்­நில காடு­களின் அழிவும் இவ்­வி­னத்தின் உற்­பத்­திக்கு சவா­லாக உள்­ளது” என்றார்.


மத்­திய கிழக்கு நாடுகள், சீனா, ஐக்­கிய அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்பா நாடு­களில் பல்­வேறு வேறாக்­கப்­பட்ட சிப்ஸ், பவுடர், எண்ணெய் மற்றும் வாசணைத் திர­வி­யங்கள், ஊது­பத்­திகள், மருந்­துகள் மட்­டு­மன்றி அதிர்ஷ்­டத்தை தரு­வ­தாக நம்­பப்­படும் ஆப­ர­ணங்கள் போன்­ற­வற்­றுக்­கான அதி­க­ரித்து வரும் கேள்வி கார­ண­மாக சந்­தே­கத்­துக்­கி­ட­மின்றி மிகச்­சி­றந்த பிர­தி­ப­லனை பெறக்­கூ­டிய துறை­யாக அகர்வூட் திகழ்­கி­றது. அரு­கி­வரும் பயிர் இனங்கள் தொடர்­பான சர்­வ­தேச வர்த்­த­கத்­திற்­கான மாநாட்டில் ; (CITESA) அகர்வூட் பட்­டி­யி­லி­டப்­பட்­டுள்­ள­துடன், இந்த இனத்தின் பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான அனு­ம­தி­யின்றி சர்­வ­தே­ச­ளவில் வர்த்­த­கத்தை மேற்­கொள்ள முடி­யாது. இந்த அதி­சய மர­மா­னது எவ்­வித வாசனை எண்ணெய் சுரப்­பி­க­ளையும் கொண்­டி­ராத இயற்­கையின் கொடை­யாக கரு­தப்­ப­டு­கி­றது. இம்­ம­ர­மா­னது நுண் கிரு­மி­களால் துளை­யிட்டு பாதிக்­கப்­படும் போது, இம்­ம­ரத்தின் மூல­மாக நுண் கிருமி எதிர்ப்­பாக சுரக்­கப்­பட்டு உரு­வா­வதே அகர்வூட் எண்ணெய் ஆகும்.

 

(Visited 96 times, 1 visits today)

Post Author: metro