10ஆவது குடும்ப சவாரி மெகா ஊக்குவிப்பில் பாரிய பரிசுக்கான வெற்றியாளர்களைத் தெரிவு செய்துள்ள சிலிங்கோ லைஃப்

செலிங்கோ லைபின் அதிர்ஷ்­ட­சாலி வாடிக்­கை­யா­ளர்கள் பலர் நாம் இங்­கி­லாந்து செல்லப் போகிறோம் என குஷி­யாகப் பாடும் காலம் வந்­துள்­ளது. ஆயுள் காப்­பு­றுதித் தலை­வர்­களின் 10 ஆவது குடும்ப சவாரி மெகா ஊக்­கு­விப்புத் திட்­டத்தில் இங்­கி­லாந்து செல்லும் வாய்ப்பை இவர்கள் வென்­றுள்­ளதே அதற்கு கார­ண­மாகும்.

 

ceylinco-FS-10-Grand-Draw
மொரட்­டுவை, நாத்­தாண்டி, நுகே­கொடை, மாத்­தறை மற்றும் கனே­முல்லை ஆகிய பகு­தி­களைச் சேர்ந்த ஐந்து வாடிக்­கை­யா­ளர்­களும் அவர்­களின் குடும்­பத்­த­வர்­க­ளுமே இந்த வாய்ப்பை வென்­றுள்­ளனர். இங்­கி­லாந்­துக்­கான சகல செல­வு­க­ளு­டனும் கூடிய முழு­மை­யான வாய்ப்பை இவர்கள் வென்­றுள்­ளனர். மேலும் 10 குடும்­பங்­க­ளுக்கு துபாய் செல்லும் வாய்ப்பு கிட்­டி­யுள்­ளது. 25 குடும்­பங்கள் சிங்­கப்பூர் செல்­ல­வுள்­ளன. 250 குடும்­பங்­க­ளுக்கு லெஷர் வேர்ள்டில் ஒரு நாளை கழிக்கும் அதிர்ஷ்டம் கிட்­டி­யுள்­ளது.


இவர்­க­ளோடு சிங்­கப்பூர் செல்­வ­தற்­காக வருட மத்தி குலுக்­கலில் தெரிவு செய்­யப்­படும் மேலும் 25 குடும்­பங்­களும், லெஷர் வேர்ள்ட் சுற்றுப் பய­ணத்­துக்­கான மேலும் 250 குடும்­பங்­களும் இணைந்து கொள்­ள­வுள்­ளன.
இவ்­வாண்டின் செலிங்கோ லைஃப் குடும்ப சவாரி திட்­டத்தின் மூலம் உள்­நாட்டு உல்­லாசம் மற்றும் வெளி­நாட்டு சுற்­றுப்­ப­யணம் என்­ப­ன­வற்­றுக்­காக மொத்தம் 2260 பேர் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். இது­வரை இந்தத் திட்­டத்தின் மூலம் நன்மை அடைந்­த­வர்கள் கிட்­டத்­தட்ட 20000 பேர் ஆவர்.


“சிறப்­பான பத்து அண்­டுகள் கழிந்­துள்­ளன. இன்­ன­மும் இலங்கை காப்­பு­றுதித் துறை வர­லாற்றில்; சிலிங்கோ லைஃப் குடும்ப சவாரி திட்டம் தான் மிகப் பெரி­யதும் மிக சுறு­சு­றுப்­பா­ன­து­மான ஊக்­கு­விப்புத் திட்­ட­மாக உள்­ளது” என்று கூறினார் சிலிங்கோ லைஃப்பின் முகா­மைத்­துவப் பணிப்­பா­ளரும் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான ஆர்.ரெங்­க­நாதன். ‘குடும்ப பிணைப்பை ஊக்­கு­விப்­பதே இந்தத் திட்­டத்தின் பிர­தான குறிக்­கோ­ளாகும். பல வெற்­றி­யா­ளர்­களைப் பொறுத்­த­மட்டில் இந்த அனு­ப­வ­மா­னது அவர்­களின் வாழ்­நாளில் மறக்க முடி­யாத ஒரு அனு­ப­வ­மா­கவும் உள்­ளது’ என்று அவர் மேலும் கூறினார்.


கடந்த நான்கு வருட காலத்தில் சிலிங்கோ குடும்ப சவாரி ஊக்­கு­விப்புத் திட்­டத்தின் வெற்­றி­யா­ளர்கள் ஜப்பான் (2014) சுவிட்­ஸர்­லாந்து (2015) ஜெர்­மனி (2016) இங்­கி­லாந்து (2017) என விஜயம் செய்யும் வாய்ப்­பக்­களை வென்­றுள்­ளனர்.


சிலிங்கோ ஓய்­வூ­திய கணக்கு வைத்­தி­ருப்­ப­வர்கள், புதி­தாக காப்­பு­றுதி கொள்­கை­யொன்றை பெற்று மூன்று மாத காலத்­துக்கு தொட­ராக கொடுப்­ப­ன­வு­களை செலுத்­தி­ய­வர்கள் இந்த வெற்­றி­வாய்ப்பை பெறும் தகுதி உடை­ய­வர்கள். அவர்­களின் கொள்­கை­களின் பெறு­மதி, ஓய்­வூ­திய கணக்கில் உள்ள மீதி என்­ப­ன­வற்றின் அடிப்­ப­டையில் நான்கு வகைப் பிரி­வு­க­ளிலும் பரி­சு­களை வெல்லும் வாய்ப்பை பெற முடியும்.


குடும்ப சவாரி திட்டம் நான்கு வர்த்தக முத்திரை தூதுவர்களால் ஊக்குவிக்கப்படுகின்றது. இலங்கை நடிகர்கள் சிறியன்த மெண்டிஸ், சஞ்சீவனி வீரசிங்க, ரொஷான் ரணவன அவரின் மனைவிகுஷ்லானி ஆகியோர் வாடிக்கையாளர்களோடு இந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறையில் பங்கேற்று மகிழ்விப்பர்.

(Visited 94 times, 1 visits today)

Post Author: metro