பத்திக் ஆடைகள் தயாரிக்கும் குடும்பம்

(நேர்காணல்: ஜெயா தயா)

 

'வேலை­யில்­லாத இளைஞர் யுவ­திகள் வேலை தேடி அலை­வதை விட்டு விட்டு ஒரு சுய தொ­ழிலைச் செய்­வதன் மூலம் வேலை­யில்லாப் பிரச்­சி­னை­யி­லி­ருந்து விடு­ப­டலாம். தனியார் நிறு­வ­னமோ அல்­லது அர­ச­து­றையோ, எத்­துறை என்­றாலும் நிம்­ம­தி­யாக வேலை செய்து மாதச் சம்பளத்தை பெற வேண்டும் என்­ப­து தான் இன்­றைய இளை­ஞர்­களின் மனோ­நி­லை­யாக இருக்­கி­றது.

15

இருப்­பினும், எப்­ப­டி­யா­வது சொந்­த­மாகத் தொழில் தொடங்கி நாம் நான்கு பேருக்கு வேலை கொடுக்கும் முத­லா­ளி­யாக உயர வேண்டும் என்று நினைக்கும் இளை­ஞர்­களும் இருக்­கத்தான் செய்­கி­றார்கள்.

Untitled-1

பொது­வாக நன்கு தெரிந்த தொழிலை தேர்ந்­தெ­டுப்­பது நல்­லது. அல்­லது எந்தத் தொழிலில் ஆர்வம் இருக்­கி­றதோ அந்தத் தொழிலில் சிறப்­புத்தேர்ச்சி பெற்று அதன்­பி­றகு தொழில் தொடங்­கலாம் என்­கிறார் பத்திக் ஆடை தயாரிக்கும் மு.துரைராஜ்.

11

1971 ஆம் ஆண்டு நாச்­சி­யப்பன் என்­பவர் இந்­தி­யா­வி­லி­ருந்து இலங்­கைக்கு பத்­திக்கை கொண்டு வந்தார். இவரால் தான் பத்­திக்­முறை இலங்­கையில் அறி­மு­க­மா­னது.  

12

1977 ஆம் ஆண்டு இத்­தொழிலை  நான் பழக ஆரம்­பித்ததுடன் இத்­தொழிலை தனியாக செய்ய ஆரம்­பித்தேன். சிறிது சிறி­தாக ஆரம்­பித்த இந்த தொழிலை செய்து எங்கள்  வாழ்க்கையை நடத்தி வரு­கிறோம். வாட­கைக்கு இடம் எடுத்து ஆறு­மாதம், ஒரு­வ­ருடம் என இடத்தை மாற்­றிக்­கொண்­டி­ருக்­கிறோம்.

8

பத்­திக்கை பெரி­ய­ளவில் செய்தால் அதி­க­வ­ரு­மா­னத்தை பெற்­றுக்­கொள்­ளலாம். சிறிய அளவில் இரண்டு, மூன்று பேரைக் கொண்டு செய்தால் வரு­மானம் ஈட்­டு­வது குறை­வாகத் தான் இருக்கும். அர­சாங்கத் தொழிலை எதிர்­பார்த்து தொழில் இல்­லாமல் இருப்­ப­வர்­க­ளுக்கு இந்தத் தொழில் பெரும் உத­வி­யாக அமையும். 

34

'பத்திக்' என்ற தரமான கொட்டன் துணியையும், ஜப்பான் டை, பல­வ­கை­யான டை வகைகள், இதற்­கென வரும் மெழுகு போன்றவற்றை பயன்­ப­டுத்தி 20 தொடக்கம் 25 நிமி­டங்கள் காய­வைத்த பிறகு கொதி நீரில் அவிக்க வேண்டும்.  பின்னர் காய­வைத்து எம்­ரோய்டர் தையல் மெஷினில் தைத்து அதன் பின்னர் இரண்டு பக்­கமும்  மூட்டி தைக்க­வேண்டும். பொத்தான் தைத்­தபின் பூர்த்­தி­யான ஆடையைப் பெற்­றுக்­கொள்­ளலாம். 

36

இந்த ஆடை­களை மன்னார், வவு­னியா, யாழ்ப்­பாணம் ஆகிய பகு­தி­க­ளில் அதி­ளவில் விற்­பனை செய்­கி­ன்றோம்'' எனவும் அவர் தெரிவித்தார்.

38

பத்திக் ஆடை தயாரிப்பு குறித்து அவர் மேலும் விளக்குகையில், ஆடைக்­கேற்ற நீளத்­துக்கு சரி­யான அமைப்­புக்­கேற்ற உப­க­ர­ணத்தை பயன்­ப­டுத்தி, அதன் மீது பொலித்தீன் விரிப்பை விரித்து அதன் மேல் தைத்த சட்­டையை விரித்து நான்கு பக்­கமும் பின்னினால் கொளுவவேண்டும், மண்­ணெண்ணெய் அடுப்பில் மெழுகை சரி­யான பதத்­துக்கு வரும்­வரை கொதிக்கவைத்து அதை ஒரு பாத்­தி­ரத்தில் எடுத்து தூரி­கையை பயன்­ப­டுத்தி ஏற்­ற­வி­தத்தில் சித்­தி­ரத்தை வரை­ய வேண்டும். பின்னர் கூம்பு வடி­வ­மான புனலை பயன்­படுத்தியும் வரை­­யலாம். 

33

இடத்­திற்கு ஏற்ற வடி­வத்தை தத்­துவ ரீதி­யா­கவும் ஆக்­க­பூர்­வ­மா­கவும் மிக விரை­வா­கவும் சுறு­சு­றுப்­பாகவும் நானும் எனது மகனும் இணைந்து வரைவோம். 

35

மெழுகு கொதிக்கும் போது டைமெ­ழுகை இட்டு சரி­யான பதத்தில் வரைவதன் மூலம் ஓர் ஆக்­கப்­பூர்­வ­மான தன்­மையை வெளிப்­ப­டுத்­தலாம்.


துணிகள் காய்ந்த பிறகு பெரிய பெரலில் மரத் தூசி, விறகு பயன்­ப­டுத்தி தீயிட்டு அதன் மேல் பெரிய பெரலை அந்த தீ அடுப்பில் வைத்து தண்ணீரை நிரப்பி கொதிக்கவைத்து  இதற்குரிய கெமிக்கல் இட்டு கொதி நீரில் பூர்த்­தி­யான ஆடை­களை வேக­வைக்க வேண்டும். காய்ந்த பின்னர் உரிய இடங்­க­ளுக்கு ஜுக்கி மெஷினால் சேடர் நூல்­களைக் கொண்டு தைத்து தேவையான இடங்­க­ளுக்கு பொத்­தான்­களை கைகளால் தைக்­க­வேண்டும்'' என்கிறார்.


'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்­பதற்கிணங்க ஒரு கூட்டுக் குடும்­பமாக இத்தொழிலை இவர்கள் செய்கிறார்கள். தந்தையும் மகனும் இணைந்து சட்­டைக்கு சித்­திரம் வரை­வ­துடன் கொதி­நீரில் அவித்து காய­வைக்க, பின்னர்  மனைவி மகேஸ்வரி, மகள் யாழினி, மரு­மகள் யோகஸ்வரி, சம்­பந்தி வேலம்மா என அனை­வரும் ஒத்­தா­சை­யாக செயற்­ப­டு­கி­றார்கள். மனைவி சட்­டைக்கு பொத்தான் பிடிக்க, மகளும் மரு­ம­களும் சட்­டைக்கு  மெஷினால் எம்ரோய்டர் போட, மனைவியும் சம்பந்தியும்  சட்டைகளை அயன்செய்து மடித்து அடுக்க அதன் பின் பொதி செய்து. விநியோகம் செய்கிறார்கள்.

 

 

(Visited 193 times, 1 visits today)

Post Author: metro