‘AIC Campus’ மற்றும் ‘IPAC Business School France’ கூட்­டி­ணைந்து இலங்­கையில் ஐரோப்­பிய வணிக பட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­து­கின்­றன

இலங்­கையில் மூன்றாம் நிலை கல்­வியை மேலும் வலுப்­ப­டுத்­து­வதில் தலை­மைத்­துவம் வகிக்கும், இலங்­கையின் முன்­னணி பன்­னாட்டு கல்வி வழங்­கு­நரும், IMC AIC  கல்விக் கூட்­ட­மைப்பின் உறுப்­பி­ன­ரு­மான AIC Campus,  பிரான்ஸின் IPAC School of Business உட­னான தனது கூட்­டி­ணைவு தொடர்பில் அறி­வித்­துள்­ளது. 

Image-03

அதன் மூல­மாக சர்­வ­தேச அங்­கீ­காரம் பெற்ற, சர்­வ­தேச வணிகம் மற்றும் சந்­தைப்­ப­டுத்­தலில் Bachelor in Business Administration(BBA)  பட்­டத்தை இலங்­கையில் அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றது. இந்த மூலோ­பாய கூட்­டி­ணைவின் மூலம் இலங்கை மாண­வர்கள், வெளி­நாட்டில் கல்வி கற்க ஏற்­படும் செலவின் ஒரு பகு­தி­யுடன், பிரான்ஸின் முன்­னணி பல்­க­லைக்­க­ழ­கத்தின் வணிக பட்­டத்தை இங்­கி­ருந்தே பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.


கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்­டலில் நடை­பெற்ற இதன் அறி­முக விழாவில், இஸ­பெல்லா மிஸ்கொட் (Chargé d’affairesa.i of the Embassy of France to Sri Lanka and Maldives)- – பிர­தம அதிதி, வெலன்­டினா வொல்ட்ரம் (Cultural Attaché of the Embassy of France to Sri Lanka and Maldives)  – கௌரவ அதிதி, ஜெரால்டின் ஹசனொட் (பணிப்­பாளர், வெளி­நாட்டு அலு­வல்கள் – IPAC Business School France),  டாக்டர்.சஞ்­ச­ய­தேவ முன­சிங்க (தலைவர், AIC Campus), டாக்டர் கிஷான் சும­ண­சிறி (நிறை­வேற்றுப் பணிப்­பாளர், பிர­தம நிறை­வேற்று அதி­காரி – AIC Campus)மற்றும் AIC Campus, IPAC Business School France  ஆகி­ய­வற்றின் அதி­கா­ரி­களும் கலந்து கொண்­டனர்.


ஐரோப்­பா­வுக்கு வெளியே IPAC யின் முதல் சர்­வ­தேச கற்கை நிலை­ய­மாக இலங்­கையின் தனியார் கல்வி நிறு­வ­ன­மான AIC Campus விளங்­கு­வ­துடன், இந்த கூட்­டி­ணைவின் மூல­மாக இலங்­கையின் தனியார் கல்­வித்­து­றையில் IPAC காலடி வைத்­துள்­ளது. IPAC பிரான்ஸின் முதல் வணிக பாட­சாலை என்­ப­துடன், ஐரோப்­பிய ஒன்­றியம் அதன் மூன்று வருட பட்­டப்­ப­டிப்பை இலங்கை மாண­வர்­க­ளுக்கு வழங்­கு­கி­றது. உயர்­த­ர­மான பிரெஞ்சு பட்­டத்தைப் பெற விரும்பும் இலங்கை மாண­வர்கள், AIC யில் 3 வருட படிப்பை பூர்த்தி செய்த பின்னர், குறைந்த செல­வி­லேயே இலங்­கையில் தங்கள் பட்­டத்தைப் பெற்­றுக்­கொள்­ளலாம். 

Image-01

இந்த புதிய கூட்­டி­ணைவு தொடர்பில் கருத்துத் தெரி­வித்த AIC Campus  இன் தலைவர் டாக்டர் சஞ்­ ச­ய­தேவ டி சில்வா முன­சிங்க, “இலங்கை மாண­வர்­க­ளுக்கு கட்­டுப்­ப­டி­யான விலையில் தர­மான கல்வியை வழங்­கு­வ­தற்­கான எங்கள் அர்ப்­ப­ணிப்பு நிக­ரில்­லா­தது.

 

மிகவும் மதிப்­பு­மிக்க பிரெஞ்சு வணி­கப்­பா­ட­சா­லை­யுடன் கூட்­டி­ணைந்து, வணி­கப்­பட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­து­வதன் மூல­மாக எங்கள் முன்­னோக்­கிய பய­ணத்தில், இலங்­கையின் பன்­னாட்டு கல்­வித்­துறை வழங்­கு­ந­ராக முத­லி­டத்தைப் பெற்­றி­ருக்­கிறோம். பிரான்ஸின் IPAC Business School ஐரோப்­பாவின் மிகச்­சி­றந்த வணி­கப்­பட்­டப்­ப­டிப்பைத் தரு­கி­றது. எனவே, மிகச்­சி­றந்த அந்த வாய்ப்பை இலங்கை மாண­வர்­க­ளுக்கு வழங்­கக்­கி­டைத்­தி­ருக்­கின்­ற­மையை மிகப்­பெ­ரிய கௌர­வ­மாக நாம் கரு­து­கிறோம்” என்று கூறினார்.


AIC Campus  இன் நிறை­வேற்றுப் பணிப்­பா­ளரும் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான டாக்டர் கிஷான் சும­ண­சிறி, “உல­க­ளா­விய ரீதி­யிலும் உள்­நாட்­டிலும் சர்­வ­தேச வணிக நடை­மு­றை­களில் முழு­மை­யான அறி­வுடன் கூடிய, வணிக நிர்­வாக திறமை கொண்ட நிபு­ணர்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்து வரு­கி­றது.

 

இந்தக் கூட்­டி­ணைவின் மூல­மாக இலங்கை மாண­வர்­க­ளுக்கு சிறந்த கல்வி வழி­காட்­டலை வழங்­க­மு­டி­யு­மென்­பதில் நாம் உறு­தி­யான நம்­பிக்கை கொண்­டுள்ளோம்.  IPAC Business School  இன் பாடத்­திட்­ட­மா­னது மாண­வர்­களின் சிறந்த திற­மையை வளர்க்கும் வகையில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ள­துடன், உள்­நாட்டு பட்­ட­தா­ரிகள் தமது திற­மை­களை மேம்­ப­டுத்தி தங்­க­ளது துறை­களில் பிர­கா­சிப்­ப­தற்­கான சிறந்த அடித்­த­ள­மா­கவும் விளங்­கு­கி­றது” என்று தெரி­வித்தார்.


உயர் தர தகை­மை­யு­டைய மாண­வர்கள் அல்­லது லண்டன் உயர் தரத்தை (London A/L)  எழு­திய மாண­வர்கள், செப்­டெம்பர் மாதம் ஆரம்­பிக்­க­வி­ருக்கும் பிரெஞ்சு பட்­டப்­ப­டிப்­புக்­காக விண்­ணப்­பித்து இணைந்­து­கொள்ள முடியும். வணிக முகா­மைத்­துவம், சந்­தைப்­ப­டுத்தல் மற்றும் உல­க­ளா­விய ரீதி­யி­லான பல்­தே­சிய நிறு­வ­னங்­களில் பணி­யாற்ற விரும்பும் மாண­வர்­க­ளுக்கு, சர்­வ­தேச வணி­கத்­துறை மற்றும் சந்­தைப்­ப­டுத்­தலில் BBA பட்­ட­மா­னது சிறந்த வாய்ப்பை வழங்­கு­கி­றது. AIC Campus இல் முதல் இரு வரு­டங்­களை பூர்த்தி செய்த பின்னர், இறு­தி­யாண்டு கல்­வியை பிரான்ஸில் கற்­கலாம். 


AIC Campus உடனான முக்கியத்துவமிக்க இந்த கூட்டிணைவு தொடர்பில் கருத்துத் தெரிவித்த IPAC Business School France  இன் வெளிநாட்டு அலுவல்களுக்கான பணிப்பாளர் ஜெரால்டின் ஹசனொட், “இலங்கையின் முன்னணி தனியார் கல்வி வழங்குநர்களில் ஒருவரான AIC Campus  உடனான இந்த கூட்டிணைவு தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எமது பட்டப்படிப்பு இலங்கை மாணவர்களுக்கு தனித்துவமான கற்றல் வாய்ப்பை வழங்கி, உலக வணிகத் தலைவர்களாக அவர்களை மாற்றுவதற்கான வழியை வழங்கப்போகிறது என்பதில் நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
 

(Visited 66 times, 1 visits today)

Post Author: metro