சுவ­தேஷி புதிய தலை­மு­றைக்­கான ‘ராணி சந்­தன ஜெல் பார்’ அறி­முகம்

ஏழு தசாப்த காலப்­ப­கு­திக்கு மேலாக இலங்­கையின் நம்­பிக்­கையை வென்ற அழ­கு­ரா­ணி­களின் சந்­தன சவர்க்­கா­ர­மான ராணி, புதிய தலை­மு­றைக்­கான ஜெல் பார் சவர்க்­கா­ரத்தை அறி­முகம் செய்­துள்­ளது. முகத்­துக்கும், உட­லுக்கும் பூசக்­ கூ­டிய நாட்டின் முத­லா­வது ஜெல் சவர்க்­கா­ர­மாக இது அமைந்­துள்­ளது.

Rani-Sandal-Gel-Bar

“ராணி சந்­தன ஜெல் பார்” என பெய­ரி­டப்­பட்­டுள்ள இந்த புதிய தயா­ரிப்பு, சந்­த­னத்தின் நலன்­களை கொண்டு, தேன் சேர்த்தும் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அழகின் இரக­சி­யத்தை உறுதி செய்து தயா­ரிக்­கப்­பட்­டுள்ள இந்த தயா­ரிப்பை, சுவ­தேஷி இன்­டஸ்­ரியல் வேர்க்ஸ் பி.எல்.சி உற்­பத்தி செய்­கி­றது.


இது gel in a gel bar  ஆகும். தற்­போது இதனைப் பயன்­ப­டுத்தி, களிப்பும், இனிய குளியல் அனு­ப­வத்தை பெற்­றுக்­கொள்­ளலாம்.  புதிய ராணி சந்­தன ஜெல் பாரில், சந்­தனம் மற்றும் தேன் சேர்க்­கப்­பட்­டுள்­ளதால், ஈரப்­ப­த­னூட்டி சரு­மத்தை மென்­மை­யாக பேணும் என நிறு­வ­னத்தின் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார்.


அரச காலம் முதல் பெண்­களின் அழகின் இரக­சி­ய­மாக சந்­தனம் திகழ்­கி­றது. சந்­த­னத்தை கல்­லொன்றில் தேய்த்து, அதனை சரு­மத்தில் பூசு­வது வழ­மை­யாக இருந்து வந்­துள்­ளது. இது அர­சி­க­ளுக்கும், உயர் மட்­டங்­களை சேர்ந்த பெண்­க­ளுக்கு தமது சரு­மத்தை மென்­மை­யாக பேணவும், அசா­தா­ர­ண­மான எண்­ணெய்த்­தன்­மையை குறைத்துக் கொள்­ளவும், சரு­மத்­துக்கு அழகைச் சேர்க்­கவும் உத­வு­கி­றது. இதனால் பிர­கா­ச­மான சரு­மத்தை பேண முடி­கி­றது.


இதில் சேர்க்­கப்­பட்­டுள்ள தேன், பருக்கள் ஏற்­ப­டு­வதை தவிர்ப்­ப­துடன், வயது முதிர்ந்த தோற்­றத்தை இல்­லாமல் செய்து, சரு­மத்தை பழு­து­பார்க்கும் அனு­கூ­லங்­களை கொண்­டுள்­ளது. பல மணி நேரத்­துக்கு சரு­மத்தை ஈரப்­ப­த­னூட்டி பேண உத­வு­கி­றது. இதனால் சருமம் மென்­மை­யா­கவும் மிரு­து­வா­கவும் திகழும்.


நவ­நா­க­ரி­கத்தை நாடும் பெண்­க­ளுக்கு “ராணி சந்­தன ஜெல் பார்” பொருத்­த­மான தெரி­வாக அமைந்­தி­ருக்கும். இவர்கள் மென்­மை­யான அழ­கிய சரு­மத்தை பேண அதி­க­ளவு கவனம் செலுத்­து­வார்கள். தூய்­மை­யாக்கல், ஈரப்­ப­த­னூட்டல் மற்றும் அழகை மேம்­ப­டுத்தல் போன்ற தன்­மை­களை வழங்கி, இள­மை­யான சரு­மத்தை பேண “ராணி சந்­தன ஜெல் பார்” வழி­கோ­லு­கி­றது.


கவர்ச்­சி­க­ர­மான புதிய வடி­வ­மைப்பில் “ராணி சந்­தன ஜெல் பார்” விற்­ப­னைக்கு வந்­துள்­ள­துடன், சந்­தையில் புதிய விறு­வி­றுப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த சவர்க்­கா­ரத்தில் காணப்­படும் பிர­தான உள்­ளம்­சங்கள் விசேட அம்­ச­மாக திகழ்­கின்­றன. சந்­தையில் காணப்­படும் முத­லா­வது ஜெல் பார் சவர்க்­கா­ர­மாக திகழும் “ராணி சந்­தன ஜெல் பார்” புதிய போக்கை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்கும் என நிறு­வனம் அறி­வித்­துள்­ளது.


நிறு­வ­னத்தின் பேச்­சாளர் தொடர்ந்து தெரி­விக்­கையில், இந்த புதிய தெரி­வுடன், சந்­தையில் உயர்ந்த ஸ்தானத்தை எய்த சுவ­தேஷி எதிர்­பார்த்­துள்­ளது, “ராணி சந்­தன ஜெல் பார்” பாரம்­ப­ரிய நன்­மை­களை வெளிப்­ப­டுத்­து­வ­துடன், புதிய தலை­மு­றை­யி­ன­ருக்கு பொருத்­த­மான வகையில் ஜெல் வடிவில் அமைந்­துள்­ளது.

 

ராணி சந்­தன ஜெல் பாரினால், சரு­மத்தை தூய்­மை­யாக்­கு­வது மட்­டு­மன்றி, சரு­மத்தின் ஈரப்­ப­தனை தக்­க­வைத்து, சரு­மத்தின் மென்­மைத்­தன்­மையை பேணி, சரு­மத்தின் புர­தங்­களை தக்­க­வைத்­துக்­கொள்ள உத­வு­கி­றது” என்றார்.


1941ஆம் ஆண்டு அறி­முகம் செய்­யப்­பட்ட ராணி வர்த்­தக நாமம், சந்­தன சோப் வகைகள் உற்­பத்தியில் அசைக்க முடியாத முன்னிலையை தன்னகத்தே கொண்டுள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாமல், சர்வதேச ரீதியிலும் வரவேற்பைப் பெற்ற தயாரிப்பாக திகழ்கிறது. இன்று, தனது வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கையை வென்ற நாமமாக நிறுவனம் திகழ்வதுடன், ராணி சந்தன சவர்க்காரம், புகழ்பெற்ற முதல் தர சந்தன அழகு வர்த்தக நாமமாக நாட்டில் திகழ்கிறது. 

(Visited 80 times, 1 visits today)

Post Author: metro