அறம் படத்துக்கு உயிரூட்டிய நயன்தாரா

‘மகளிர் மட்டும்’ படத்தைத் தொடர்ந்து ஜிப்ரான் இசை­ய­மைப்­பா­ள­ராக பணி­பு­ரிந்­துள்ள ‘அறம்’ படம் வெளி­யாகவிருக்­கி­றது. இந்தப் படத்தை அடுத்து, தாமிரா இயக்­கத்தில் சமுத்­தி­ரக்­கனி நடித்­துள்ள ‘ஆண் தேவதை’ படமும், ஜிப்ரான் தயா­ரித்­துள்ள ‘சென்னை டு சிங்­கப்பூர்’ படமும் வெளி­யாக உள்­ளன.

தற்­போது ‘அறம்’ படத்தின் இறு­திக்­கட்டப் பணிகள் தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கின்­றன. ‘அறம்’ தீபா­வ­ளிக்கு வெளி­யா­வதை அடுத்து அப்­ப­டத்தின் பின்­னணி இசை தற்­போது முடி­வ­டைந்­துள்­ளது. ‘அறம்’படம் பற்றி, தனது பேஸ்புக் பக்­கத்தில் சில தக­வல்­களை தெரி­வித்­துள்ளார் ஜிப்ரான்.

‘அறம்’ படத்தின் கடைசி கட்ட ஒலிக் கலவை பணி­களை முடித்தோம். இந்த அற்­பு­த­மான படத்தில் பங்­காற்ற வைத்த இறை­வ­னுக்கு மிகவும் நன்றி. வளர்ச்­சி­ய­டை­யாத இந்­தி­யாவின் ஒரு பகு­தி­யி­லி­ருந்து வந்­த­வ­னாக, இன்னும் அந்தப் பகு­தியில் வேரூன்­றி­யி­ருப்­ப­வ­னாக என்னால் இந்தப் படத்­தோட என்னை நிறைய சம்­பந்­தப்­ப­டுத்திக் கொள்ள முடி­கி­றது. மக்கள் கேட்க வேண்­டிய பிரச்­சி­னையைப் பற்றி இந்தப் படம் பேசு­கி­றது. படம் பெரிய திரையில் வந்­ததும் அதன் நோக்கம் நிறை­வேறும் என நம்­பு­கிறேன்.”

அத்தோடு, ‘அறம்’ படத்­துக்கு உயி­ரூட்­டிய நயன்­தாரா படத்தின் இயக்­குநர் கோபி, தயா­ரிப்­பாளர் ராஜேஷ், ஒளிப்­ப­தி­வாளர் ஓம்பிரகாஷ், எடிட்டர் ரூபன், சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் ஆகியோருக்கு நன்றி தெரித்துள்ளார்.

(Visited 56 times, 1 visits today)

Post Author: metro