இலங்கையில் 5 இலட்சம் பேருக்கு கண்வில்லைகள் தேவை! சில வைத்தியர்களின் நடவடிக்கையினாலேயே இந்த நிலை – பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசீம்

(காங்­கே­ய­னோடை நிருபர்)

இலங்­கையில் கண் வில்லை மாற்று (கற்ரிக்) சத்­திர சிகிச்சை செய்ய வேண்­டி­ய­வர்கள் சுமார் ஐந்து இலட்சம் பேர் உள்­ளனர் என சுகா­தார பிர­தி­ய­மைச்சர் பைசால் காசீம் தெரி­வித்தார்.காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையில் நடை­பெற்ற கண் சித்­திர சிகிச்சை முகாம் ஆரம்ப வைப­வத்தில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

சுகா­தார அமைச்சின் அனு­ம­தி­யுடன் பாகிஸ்தான் அல் பசர் நிறு­வ­னத்தின் நிதி அனு­ச­ர­ணை­யுடன் இலங்கை ஜம் இய்­யத்துஸ் ஸபாப் நிறு­வ­னத்­தினால் காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையில் நடை­பெற்ற கண்­சத்­திர சிகிச்சை முகாம் வைப­வத்தில் தொடர்ந்­து­ரை­யாற்­றிய அவர் இலங்­கையில் கண் வில்லை மாற்று (கற்ரிக்) சத்­திர சிகிச்சை செய்ய வேண்­டி­ய­வர்­கள ஐந்து இலட்சம் பேர் உள்­ளனர்.

இது எமக்கு ஒரு சவா­லான விட­ய­மாக உள்­ளது. சில வைத்­தி­யர்­களின் நட­வ­டிக்­கை­யி­னா­லேயே இந்த நிலை ஏற்­பட்­டுள்­ளது. வைத்­தி­யர்­களின் பிரச்­சி­னை­யினால் இது சவ­லான ஒரு விட­ய­மாக மாறி­யுள்­ளது.

இந்த நாட்டில் கண் வில்­லை­களை அதிக விலைக்கு சிலர் விற்­பனை செய்து கொண்­டி­ருந்த போது வறிய மக்­களின் நலன் கருதி எமது சுகா­தார அமைச்சர் ராஜித சேனா ரத்ன கண் வில்­லை­களை குறைந்த விலைக்கு சுகா­தார அமைச்சின் ஊடாக கொள்­வ­னவு செய்து அதனை இல­வ­ச­மாக வழங்கி தேவைப்­ப­டு­வோ­ருக்­கான சத்­திர சிகிச்­சை­களை மேற் கொள்ள அறிவித்த போது பல தரப்பட்ட சவால்களை சுகாதார அமைச்சு எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

(Visited 22 times, 1 visits today)

Post Author: metro