தேசி­ய­ளவில் ஒப்­பி­டு­கையில் பெருந்­தோட்டப் பகு­தி­களில் சிறு­வர்­களின் மந்­த­போ­சனை நிலைமை அதி­க­ரித்­துள்­ளது – அமைச்சர் பழனி திகாம்­பரம்

பெருந்­தோட்ட பகு­தி­களில் வாழும் சிறு­வர்­களின் மந்­த­போ­சனை நிலையை கட்­டுப்­ப­டுத்தும் நோக்கில் போசனை கொண்ட பிஸ்கட் அறி­முகஞ் செய்­யப்­பட்­டுள்­ள­தாக மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மற்றும் சமு­தாய அபி­வி­ருத்தி அமைச்சர் பழனி திகாம்­பரம் தெரி­வித்­துள்ளார்.

சர்­வ­தேச சிறுவர் தினத்தை முன்­னிட்டு நுவ­ரெ­லியா சினி­சிட்டா அரங்கில் இடம்­பெற்ற சிறுவர் தின கொண்­டாட்ட நிகழ்வில் அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தேசி­ய­ளவில் ஒப்­பி­டு­கையில் பெருந்­தோட்டப் பகு­தி­களில் சிறு­வர்­களின் மந்­த­போ­சனை நிலை அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வ­தா­கவும் இது சிறு­வர்­களின் சுகா­தார நிலைக்கு ஆரோக்­கிய தன்மை இல்லை எனவும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.

கடந்த கால ஆட்­சி­யா­ளர்கள் இவற்றை கண்டு அமைதி காத்­த­தா­கவும் ஆனால் தனது அமைச்சின் ஊடாக இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணும் வகையில் புதிய போசனை உணவு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

சிறு­வர்கள் எதிர்­கால தலை­வர்கள் என்றும் தன்னைப் போன்று சிறு­வர்­களை எதிர்­காலத் தலை­வர்­க­ளாக மாற்ற வேண்­டு­மாயின் அவர்­களின் போசனை மற்றும் கல்வி தொடர்பில் அதிக கரி­சனை கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் பழனி திகாம்­பரம் கூறினார்.

சிறு­வர்­களின் நலன்­க­ருதி அவர்­களை லயத்து வீட்­டி­லி­ருந்து தனி வீட்­டுக்கு நிலை­மாற்ற தனது அமைச்சு மூலம் தனி­வீட்டுத் திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அமைச்சின் நிதியின் ஊடாகவும் உலக வங்கி நிதி ஊடாகவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச் சர் சுட்டிக்காட்டினார்.

(Visited 41 times, 1 visits today)

Post Author: metro