ஹட்டனில் காணாமல் போன ஆட்டோ பாகங்கள் அகற்றப்பட்ட நிலையில் மீட்பு

(க.கிஷாந்தன்)

ஹட்டன், குடா­கம பகு­தியில் காணாமல் போன முச்­சக்­க­ர­வண்டி அக்க­ரப்­பத்­தனை பகு­தி­யி­லி­ருந்து மீட்­கப்­பட்­டுள்­ள­தாக ஹட்டன் பொலிஸார் தெரி­வித்­தனர்.

ஹட்டன் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட குடா­கம பகு­தியில் தனது வீட்­டுக்கு அருகில் நிறுத்தி வைக்­கப்­ப­டி­ருந்த முச்­சக்­க­ர­வண்டி காணாமல் போன­தாக முச்­சக்­க­ர­வண்டி உரி­மை­யா­ள­ரினால் ஹட்டன் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

முறைப்­பாட்­டை­ய­டுத்து பொலிஸார் விசா­ர­ணையை ஆரம்­பித்த நிலையில் குறித்த முச்­சக்­க­ர­வண்டி அக்க­ரப்­பத்­தனை போடைஸ் எல்­பியன் தோட்­டப்­ப­கு­தியில் அக்க­ரப்­பத்­தனை பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்­டுள்­ளது.
முச்­சக்­க­ர­வண்­டியின் டயர்கள், எஞ்சின் மற்றும் கண்­ணா­டிகள் அகற்­றப்­பட்ட நிலை­யி­லேயே மீட்­கப்­பட்­டுள்­ளது.

(Visited 48 times, 1 visits today)

Post Author: metro