1948 : துர்க்மேனிஸ்தான் பூகம்பத்தினால் 110,000 பேர் பலி!

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 05

 

1582 : கிற­கோ­ரியன் நாட்­காட்டி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து இத்­தா­லி, போலந்­து, போர்த்­துக்­கல், ஸ்பெயின் ஆகிய நாடு­களில் 1582 ஆம் ஆண்டில் ஒக்­டோபர் 5 ஆம் திகதி இல்­லாமல் போனது.

1789 : பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் பெண்கள் பதி­னாறாம் லூயி மன்­ன­னுக்கு எதி­ராக வொர்சாய் அரண்­மனை நோக்கி அணி­தி­ரண்டு சென்­றனர்.

1793 : பிரெஞ்சுப் புரட்சி: பிரான்ஸில் கிறிஸ்­தவ மதம் தடை­செய்­யப்­பட்­டது.

1795 : இலங்­கையின் மன்னார் பிராந்­தி­யத்தில் ஒல்­லாந்­தர்கள் சர­ண­டைந்­த­தை­ய­டுத்து அப்­பி­ராந்­தி­யத்தை ஆங்­கி­லேயர் கைப்­பற்­றினர்.

1799 : கைது ­செய்­யப்­பட்ட வீர­பாண்­டிய கட்­ட­பொம்­மனை ஆங்­கி­லே­யர்கள் கயத்­தாறு சிறை­யி­ல­டைத்­தனர்.

1864 : இந்­தி­யாவின் கல்­கத்தா நக­ரத்தில் இடம்­பெற்ற சூறா­வளி நகரை முற்­றாக சேதப்­ப­டுத்­தி­யது. 60,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1905 : வில்பர் ரைட் 24 மைல்­களை 39 நிமி­டங்­களில் விமா­னத்தில் பறந்து சாதனை படைத்தார். 1908 ஆம் ஆண்­டு­வரை இச்­சா­தனை நீடித்­தது.

1910 : போர்த்­துக்­கலில் அர­சாட்சி முடி­வுக்கு வந்­து, அது குடி­ய­ரசு நாடா­கி­யது.

1915 : முதலாம் உலகப் போர்: பல்கே­ரியா போரில் இறங்­கி­யது.

1944 : இரண்டாம் உலகப் போர்: ஜேர்­ம­னியின் ஜெட் விமானம் ஒன்றை முதற் தட­வை­யாக கனே­டிய விமானப் படை­யினர் பிரான்ஸில் சுட்டு வீழ்த்­தினர்.

1944 : பிரான்ஸில் பெண்கள் வாக்­க­ளிக்க அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டனர்.

1948 : துர்க்­மே­னிஸ்தான் தலை­நகர் அஷ்­க­பாத்தல் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் 110,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.
1962 : முத­லா­வது ஜேம்ஸ் பொண்ட் திரைப்­ப­ட­மான ‘டொக்டர் நோ’ பிரிட்­டனில் வெளி­வந்­தது.

1974 : இங்­கி­லாந்தில் ஐரிஷ் குடி­ய­ரசு இரா­ணு­வத்­தினர் மது­பான சாலை ஒன்றில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்­ததில் 5 பேர் கொல்­லப்­பட்­டனர். 65 பேர் காய­ம­டைந்­தனர்.

1978 : ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்தில் இலங்கைப் பிர­தி­நி­தி­யான அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீத் உரை­யாற்­று­வ­தற்கு முன் இலங்கைச் சட்­டத்­த­ர­ணி­யான கிருஷ்ணா வைகுந்­த­வாசன் திடீ­ரென உரை­யாற்ற ஆரம்­பித்­து, இலங்கைத் தமி­ழர்­களின் பிரச்­சினை குறித்து கூறி­ய­துடன் தமி­ழீழ தேசத்­தினைத் தனி­நா­டாக அங்­கீ­க­ரிக்­கு­மாறு கூறி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தினார்.

1987 : விடு­தலைப் புலி­களின் சிரேஷ்ட தலை­வர்கள் 12 பேர் இந்­தியப் படையின் காவலில் இருக்­கும்­போது நஞ்­ச­ருந்தி மரண­மா­னார்கள்.

1991 : இந்­தோ­னே­ஷி­யாவின் இரா­ணுவ விமானம் ஒன்று ஜகார்த்­தாவில் விபத்­துக்­குள்­ளா­கி­யதில் 137 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1999 : மேற்கு லண்­டனில் இடம்­பெற்ற ரயில் விபத்தில் 31 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2000 : யூகோஸ்லாவிய ஜனாதிபதி மிலோசேவிச்சுக்கு எதிராக தலைநகர் பெல்கிரேட்டில் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

2013 : தாய்லாந்தில் மேகோங் நதியில் சென்று கொண்டிருந்த இரு சீன கப்பல்களின் 13 மாலுமிகள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர்

(Visited 45 times, 1 visits today)

Post Author: metro