குற்றத்தை ஒப்புக் கொண்டார் நடிகர் ஜெய்; 6 மாதங்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் ரத்து

 மதுபோதையில் வாகனம்.செலுத்தி விபத்து ஏற்படுத்தியமை தொடர்பான தன்மீதான குற்றச்சாட்டைஒப்புக் கொண்ட நடிகர் ஜெய்யின் சாரதி அனுமதிப்பத்திரத்தை ஆறு மாதங்களுக்கு ரத்து செய்ததுடன். 5200 ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நடிகர் ஜெய் கடந்த செப்டம்பர்  21 ஆம் திகதி மதுபோதையில் காரை செலுத்திச் சென்று வீதி தடுப்புச்சுவரில் மோதிவிபத்து ஏற்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து ஜெய் மீது மதுபோதையில் கார் செலுத்தியமை, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தமை, அதி வேகமாக வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட 3  குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

எனினும். இவ்வழக்கில் ஜெய் ஆஜராகததால் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுக்காலை  அவர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

 

(Visited 45 times, 1 visits today)

Post Author: metro