விஜய், கார்த்தி ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங்

தமிழில் ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’, ‘தடையறத்தாக்க’ என சில படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். இந்த படங்களுக்குப்பிறகு தமிழில் அவருக்கு புதிய படங்கள் கிடைக்கவில்லை.

அதனால் தெலுங்கிற்கு சென்று நடிக்கத் தொடங்கிய அவருக்கு நடித்த பல படங்கள் ஹிட்டாக அமையவே, தெலுங்கு சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகி விட்டார் ரகுல்பிரீத்சிங்.

இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படத்தில் நடித்து, தமிழில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த ரகுல்பிரீத்சிங், தற்போது கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்துள்ளார்.

tஇந்த படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.

அதோடு, இந்த படத்தை அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி, அதற்கடுத்து ரஜத் இயக்கத்தில் நடிக்கிறார். அந்த படத்திலும் அவருக்கு ஜோடியாக ரகுல்பிரீத் சிங் நடிக்கிறாராம்.

01..0ஆக, ஸ்பைடருக்கு பிறகு இரண்டு மெகா படங்களை தமிழில் கைப்பற்றியிருக்கிறார் ரகுல்பிரீத் சிங்.

(Visited 124 times, 1 visits today)

Post Author: metro