ஐயாயிரம் முறை படம் பார்த்தால் ராஷ்மியுடன் டேட்டிங்

‘கண்டேன், மாப்­பிள்ளை ‘விநா­யகர்’, ‘தவ்லத்’ போன்ற படங்­களில் நடித்­தி­ருப்­பவர் ராஷ்மி கௌதம். தெலுங்­கிலும் பல்­வேறு படங்­களில் நடித்­துள்ளார்.

 

நிறைய படங்­களில் நடித்த போதும் அதிர்ஷ்ட தேவதை இன்­னமும் அவர் வீட்டுக் கதவை தட்­ட­வில்லை.

 

தனது ஒரு பட­மா­வது சூப்பர் ஹிட் ஆகி­விட்டால் அது தன்னை உய­ரத்­துக்கு கொண்டு சென்­று­விடும் என்று எண்­ணி­யி­ருக்­கிறார். அதற்­காக பல்­வேறு யுக்­தி­களை கையாண்டு வரு­கிறார்.

ராஷ்மி கௌதம் தெலுங்கில் நடித்­துள்ள ‘நெக்ஸ்ட் நுவ்வு’ படம் விரைவில் திரைக்கு வர­வுள்­ளது.

 

இப்­ப­டத்தை யார் ஒருவர் 5 ஆயிரம் முறை பார்க்­கி­றாரோ அவர் தன்­னுடன் டேட்டிங் செய்­யலாம் என்று தெரி­வித்­தி­ருக்­கிறார்.

 

வீடி­யோவில் ராஷ்­மியே பதி­விட்டு வெளி­யிட்­டி­ருக்கும் இந்த தகவல் இணைய தளத்தில் வைர­லாகி உள்­ளது.

நடி­கை­யுடன் டேட்டிங் என்றால் சும்­மாவா என்ற நப்­பா­சை­யுடன் பல ரசி­கர்கள் இப்­போதே டிக்கெட் காசுக்­காக கார்­டு­களை தேய்க்க ஆரம்­பித்­து­விட்­டனர்.

 

ஒரு டிக்கெட் விலை 100 ரூபாய் (இந்­திய ரூபா) என்­றாலும் 5 ஆயிரம் முறை பார்க்க 5 இலட்சம் ரூபா தேவைப்­படும்.

 

அவ்­வ­ளவு முறை பார்த்­த­பி­றகு சொன்­ன­படி நடிகை டேட்டிங் செய்­வாரா அல்­லது பட பப்­ளி­சிட்­டிக்­காக சொன்னேன் என்று அல்வா கொடுத்துவிடுவாரா என்றும் சில ரசிகர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

(Visited 118 times, 1 visits today)

Post Author: metro