கறுப்பினப் பெண் வெள்ளையாக மாறுவதாக சித்திரிக்கும் விளம்பரம்; மன்­னிப்புக் கோரி­யது Dove

கறுப்­பினப் பெண்­ணொ­ருவர் வெள்ளை நிற­மாக மாறு­வது போல் சித்­தி­ரிக்கும் விளம்­ப­ர­மொன்றை வெளி­யிட்­ட­மைக்­காக பிர­பல உடற் பரா­ம­ரிப்புச் சாதன வர்த்தக நாம­மான Dove(டவ்) மன்­னிப்பு கோரி­யுள்­ளது.


Dove பேஸ் புக் பக்­க­மொன்றில் கடந்த வியா­ழக்­கி­ழமை மேற்­படி விளம்­பரம் வெளி­யி­டப்­பட்­டது.

 

Dove பொடி வோஷுக்­கான இந்த விளம்­ப­ரத்தில், பிரவுண் நிற ஆடை­ய­ணிந்த கறுப்­பின பெண்­ணொ­ருவர், வெள்­ளை­யாக மாறு­வ­தாக சித்­தி­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

 

இவ்­வி­ளம்­ப­ரத்தைப் பார்த்த பலரும் இது இன­வா­த­மான விளம்­பரம் என விமர்­சித்­தனர்.

 

இதற்கு முன்­னரும் டவ் வெளி­யிட்ட சில விளம்­ப­ரங்கள் இன­வா­த­மா­னது என விமர்­சிக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில், கடந்த சனிக்­ கி­ழமை மேற்­படி விளம்­ப­ரத்தை தனது பேஸ் புக் பக்­கத்­தி­லி­ருந்து டவ் அகற்­றிக்­கொண்­ட­துடன், அவ்­வி­ளம்­ப­ரத்­துக்­காக மன்­னிப்பும் கோரி­யுள்­ளது.

பல்­லி­னத்­துவ அழகை பிர­தி­நி­தித்­துவப்படுத்­து­வ­தற்கு டவ் தன்னை அர்ப்­ப­ணித்­துள்­ளது.

 

இவ்­வாரம் (கடந்த வாரம்) நாம் வெளி­யிட்ட பட­மொன்று இந்த அடை­யா­ளத்தை தவ­றி­விட்­டுள்­ளது. இதற்­காக நாம் மிகவும் வருந்­து­கிறோம் என டவ் தெரிவித்­துள்­ளது.

Dove பேச்­சா­ளர் மெரிஷா சொலென் ஞாயி­றன்று இது தொடர்­பாக கூறு­கையில், பல்­லினத் தன்­மையை நாம் கொண்­டாடும் நிலையில் Dove வோஷ் ஆனது அனைத்துப் பெண்­க­ளுக்­கு­மா­னது என்­பதை வெளிப்­ப­டுத்­து­ வதற்­காக மேற்படி விளம்பரமானது தயாரிக்கப்பட்டது. ஆனால், இதில் பிழை ஏற்பட்டதுடன் பலரை பாதிக்கச் செய்துள்ளது. அதனால் அந்த விளம்பரம் நீக்கப்பட்டுள்ளது” என்றார்.

(Visited 201 times, 1 visits today)

Post Author: metro