உபயோகித்த தேங்காய் எண்ணெய் புறக்கோட்டையில் மீள் விற்பனை; 100 பெரல் எண்ணெய், இரசாயனங்களை அடைக்கும் 25 கொள்கலன்கள் சிக்கின

கொழும்பு புறக்­கோட்டை மொத்த விற்­பனை நிலையம் ஒன்றில் விற்­ப­னைக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த உப­யோ­கித்த தேங்காய் எண்ணெய் அடைக்­கப்­பட்­டி­ருந்த 100 பெரல்­க­ளையும் இர­சா­யனப் பொருட்­களை அடைக்கும் 25 கொள்­க­லன்­களில் நிரப்­பப்­ப­ட­வி­ருந்த தேங்காய் எண்ணெய் பெரல்­க­ளையும் நுகர்வோர் பாது­காப்பு அதி­கார சபை அதி­கா­ரிகள் இன்று கைப்­பற்­றினர்.


தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் அந்­தப்­பி­ர­தே­சத்தை சுற்­றி­வ­ளைத்த அதி­கா­ர­சபை அதி­கா­ரிகள் தேடுதல் நட­வ­டிக்­கையின் பின்னர் இந்த சட்­ட­வி­ரோத வியா­பார நட­வ­டிக்­கையை கண்­டு­பி­டித்­தனர்.

பாவித்த தேங்காய் எண்­ணெய், நுகர்­வோரின் பாவ­னைக்கு வழங்­காமல், வேறு பாவ­னைக்கே விற்­கப்­ப­டு­வ­தாக வர்த்­தக நிலை­யத்தின் உரி­மை­யாளர் அதி­கா­ரி­க­ளிடம் தெரி­வித்த போதும் அதற்­கான எந்த ஆதா­ரங்­க­ளையும் சமர்ப்­பிக்­க­வில்­லை­யென சுற்­றி­வ­ளைப்பில் ஈடு­பட்ட அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

அத்­துடன், மனித பாவ­னைக்கு தடை­செய்­யப்­பட்ட இர­சா­யனப் பதார்த்­தங்­களை அடைக்கும் கொள்­க­லன்­களில் தேங்காய் எண்­ணெயை நிரப்­பு­வ­தற்கு தயார்­நி­லையில் இருப்­ப­தையும் அதி­கா­ரிகள் கண்­டு­பி­டித்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சின் கீழான நுகர்வோர் பாது­காப்பு அதி­கார சபையின் அதி­கா­ரிகள் நாடெங்­கிலும் சட்­ட­வி­ரோ­த­மாக விற்­பனை செய்­வோ­ரை­யும், கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமாக கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் வர்த்தகர்களையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

(Visited 158 times, 1 visits today)

Post Author: metro