அபுதாபியில் கைதாகி நாடு கடத்தப்பட்ட இரேஷா டி சில்வா பிணையில் விடுதலை

(ரெ.கிறிஷ்­ணகாந், எம்.எப்.எம்.பஸீர்)

அபு­தா­பி­யி­லி­ருந்து நாடு கடத்­தப்­பட்ட, நாடா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்­ ­ஷவின் கவர்ஸ் கோப்­ரேஷன் நிறு­வ­னத்தின் பணிப்­பாளர் எனக் கூறப்­படும் பட்­ட­பொல இரேஷா டி சில்வா நேற்­றுக்­காலை நாடு திரும்­பிய நிலையில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வைத்து கைது செய்­யப்­பட்டார். பின்னர் கொழும்பு மேல் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட போது அவர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டார்.

கைது செய்­யப்­பட்ட இரேஷா டி சில்வா நேற்­றைய தினம் கொழும்பு மேல்­நீ­தி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட வேளையில் 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை­யிலும், 50 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சரீரப் பிணை­யிலும் செல்ல நீதி­மன்றம் அனு­ம­தி­ய­ளித்­தது. அத்­துடன் ஒவ்­வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழ­மை­யன்று நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் கையொப்­ப­மிட இரே­ஷா­வுக்கு உத்­த­ர­விட்­ட­தோடு அவ­ரது வெளி­நாட்டு பய­ணத்­தையும் நீதி­மன்றம் தடை செய்­தது.

இரேஷா டி சில்வா வழக்கு விசா­ர­ணை­க­ளுக்­காக நீதி­மன்ற வழக்கு விசா­ரணை அழைப்­பு­களை புறக்­க­ணித்து வந்த கார­ணத்தால் அவரைக் கைது செய்­யு­மாறு நீதி­மன்­றினால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் இரேஷா வெளி­நாட்டில் தலை­ம­றை­வா­கி­யுள்­ள­தாக தகவல் கிடைத்­தது.

இத்­த­க­வ­லை­ய­டுத்து இது தொடர்­பாக சர்­வ­தேச பொலிஸார் (இன்­டபோல்) உத­வியை பெற்று அபு­தா­பியில் வைத்து அவர் கைது செய்­யப்­பட்டு நாடு­க­டத்­தப்­பட்ட நிலையில் நேற்­றைய தினம் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டைந்­த­போது குடி­வ­ரவு, குடி­ய­கல்வு அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்டு நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டதன் பின்னர் கொழும்பு மேல் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டார்.

2013 ஒக்­டோபர் 1 ஆம் திக­திக்கும் 2014 ஆகஸ்ட் 31 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜபக் ஷவுக்கு சொந்­த­மான கவர்ஸ் கோப்­பரேட் சர்­விசஸ் நிறு­வனம் பிறி­தொரு நிறு­வ­ன­மொன்­றுடன் மேற்­கொண்ட கொடுக்கல் வாங்­கல்­க­ளின்­போது முர­ணான வகையில் நிதி­யீட்ட சதி மேற்­கொண்­டமை, அதற்­க­மைய முறை­யற்ற விதத்தில் 30 மில்­லியன் ரூபா நிதி­யீட்­டிய குற்­றச்­சாட்டில் சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக 11 குற்­றச்­சாட்­டு­களின் கீழ் சட்­டமா அதி­பரால் வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது.

இந்த வழக்கின் எதி­ரி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்ள ஒர்­னெலா இரேஷா டி சில்வா உள்­ளிட்ட மூவர் வெளி­நாட்­டுக்கு தப்பிச் சென்­றி­ருந்த நிலையில் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந் நிலையில் எச்.சி.129/17 எனும் இலக்­கத்தின் கீழ் விசா­ரிக்­கப்­பட்டு வரும் இந்த கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு வழக்கும் நேற்று கொழும்பு 7 ஆம் இலக்க மேல் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

 

இரேஷா டி சில்வா மேல­தி­க­மாக இந்த கவர்ஸ் கோப்­ரடிஸ் சேர்­விசஸ் வழக்கில் முதல் பிர­தி­வா­தி­யாக நாமல் ராஜபக் ஷ பெய­ரி­டப்­பட்­டுள்ள நிலையில் 2ஆம் 3 ஆம் பிர­தி­வா­தி­க­ளாக முறையே இந்­திக பிரதாப் கரு­ணா­ஜீவ, சுஜானி போகொல்­லா­கம ஆகி­யோரும் 5 ஆம் பிர­தி­வா­தி­யாக  நித்­திய சேனானி சம­ர­நா­யக்­கவும் 6 ஆவது பிர­தி­வா­தி­யாக வரை­யறு க்கப்­பட்ட கவர்ஸ் கோப்­ரடீஸ் சேர்­விசஸ் தனியார் நிறு­வனம்  பெய­ரி­டப்­பட்­டுள்­ளன.

 

இந் நிலையில் நேற்று விசாரணைகள் இடம்பெற்ற போது, இது தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, குற்றப் பத்திரிகை மீதான விசாரணைகளை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 16 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார்.

(படப்பிடிப்பு க. தனுஷன்)

(Visited 92 times, 1 visits today)