கார் மோதியதில் வீதியால் சென்ற இரு பெண்களும் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும் உயிரிழப்பு

(ரெ.கிறிஷ்­ணகாந், செங்­க­ட­கல நிருபர்)

மஹி­யங்­க­னை­யி­லி­ருந்து கண்டி நோக்கிப் பய­ணித்துக் கொண்­டி­ருந்த காரொன்று தெல்­தெ­னிய பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கோன­வலை பிர­தே­சத்தில் நேற்­றுக்­காலை மோட்டார் சைக்கிள் ஒன்­றையும் பெண்கள் இரு­வ­ரையும் மோதி விபத்­துக்­குள்­ளா­ன தில் மூவர் உயி­ரி­ழந்­துள்­ள­தோடு, இருவர் காய­ம­டைந்­துள்­ள­தாக தெல்­தெ­னிய பொலிஸார் தெரி­வித்தனர்.

நேற்­றுக்­காலை கண்டி நோக்கி பய­ணித்த காரொன்று நேற்று காலை 7 மணி­ய­ளவில் கோன­வல, திகன கனிஷ்ட பாட­சா­லைக்கு அருகில், சார­திக்கு நித்­திரை ஏற்­பட்­ட­தனால் கட்­டுப்­பாட்­டை­யி­ழந்து எதி­ரில்­வந்த மோட்டார் சைக்­கிளை மோதி­ய­துடன், அவ்­வீ­தியால் நடந்து சென்ற இரு பெண்­க­ளையும் மோதிப் படு­கா­ய­ம­டையச் செய்­ததன் பின்னர் மதி­லொன்­றுடன் மோதி விபத்­துக்­குள்­ளா­னது.

சம்­ப­வத்தில் படு­கா­ய­ம­டைந்து நசுங்­குண்ட மோட்டார் சைக்கிள் ஓட்­டு­நரும், வீதியால் சென்ற பெண்கள் இரு­வரும் உட­ன­டி­யாக தெல்­தெ­னிய வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்ட நிலையில் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்­ளனர்.

அத்­துடன் கார் சார­தியும் அவ­ருடன் பய­ணித்த மற்­றொரு நபரும் இவ்­வி­பத்தில் காய­ம­டைந்த நிலையில் தெல்­தெ­னிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் கார் சாரதி மாத்­திரம் கண்டி வைத்­தி­ய­சா­லைக்கு மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக மாற்­றப்­பட்­டுள்ளார்.

இவ்­வி­பத்தில், மோட்டார் சைக்­கிளை செலுத்திச் சென்ற ரஜ­வெல்ல, திகன மாபெ­ரிய தென்ன பிர­தே­சத்தை சேர்ந்த ரெங்­க­சாமி செல்­வ­குமார் (41), கொட­கொட, வேபன பிர­தே­சத்தைச் சேர்ந்த வை. எம். சந்­தி­ர­கு­மாரி(40) மற்றும் கோன­வலை, உடு­கம்­பெத்­தவைச் சேர்ந்த ஆர். எம். ரம்­யா­கு­மாரி (30) ஆகி­யோரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

(Visited 91 times, 1 visits today)

Post Author: metro