1138 : சிரி­யாவில் பூகம்­பத்­தினால் 200,000 பேர் பலி

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 11

 

1138 : சிரி­யாவில் ஏற்­பட்ட பாரிய பூகம்­பத்­தினால் சுமார் 200,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1634 : டென்மார்க் மற்றும் ஜேர்­ம­னியில் ஏற்­பட்ட பெரும் வெள்­ளத்­தினால் 15,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.
1727 : பிரித்­தா­னிய மன்­ன­ராக 2 ஆம் ஜோர்ஜ் பத­வி­யேற்றார்.

1811 : ஜோன் ஸ்டீவன்ஸ் கண்­டு­பி­டித்த ஜூலி­யானா என்ற முத­லா­வது நீராவிப் படகுக் கப்­பலின் சேவை அமெ­ரிக்­காவின் நியூயோர்க்­குக்கும் நியூஜேர்­ஸிக்கும் இடையில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1852 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் மிகப் பழைமை­யான சிட்னி பல்­க­லைக்­க­ழகம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

1865 : ஜமைக்­காவில் நூற்­றுக்கும் அதி­க­மான கறுப்­பின மக்கள் அர­சுக்­கெ­தி­ரான எதிர்ப்புப் போராட்­டத்தை ஆரம்­பித்­தனர். இது அன்­றைய பிரித்­தா­னிய அரசால் நசுக்­கப்­பட்­டதில் நானூற்­றுக்கும் அதி­க­மான கறுப்­பி­னத்­த­வர்கள் கொல்­லப்­பட்­டனர்.

1899 : இரண்­டா­வது போவர் போர் தென் ஆபி­ரிக்­காவில் ஐக்­கிய இராச்­சி­யத்­துக்கு எதி­ராக ஆரம்­ப­மா­னது.

1941 : மெசி­டோ­னிய தேசிய விடு­தலைப் போர் ஆரம்­ப­மா­கி­யது.

1910 : அமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி தியோடர் ரூஸ்வெல்ட் விமா­னத்தில் பறந்தார். அமெ­ரிக்­காவில் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த ஒருவர் விமா­னத்தில் பறந்­தமை இதுவே முதல் தட­வை­யாகும்.

1944 : துவீ­னிய மக்கள் குடி­ய­ரசு சோவியத் ஒன்­றி­யத்­துடன் இணைந்­தது.

1954 : வட வியட்­நாமை வியட் மின் படைகள் தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­தன.

1958 : நாசாவின் முத­லா­வது விண்­கலம் பய­ணியர் 1 சந்­தி­ரனை நோக்கி ஏவப்­பட்­டது. இது சந்­தி­ரனை அடை­யா­மலே இரண்டு நாட்­களில் மீண்­டும் பூமியில் வீழ்ந்து எரிந்­தது.

1968 : நாசா முதற்தட­வை­யாக மூன்று விண்­வெளி வீரர்­களை அப்­பலோ–7 விண்­க­லத்தில் விண்­ணுக்கு ஏவி­யது.

1984 : சலேஞ்சர் விண்­ணோ­டத்தில் சென்ற கத்ரின் சலிவன், விண்ணில் நடந்த முத­லா­வது அமெ­ரிக்கப் பெண் என்ற பெரு­மையைப் பெற்றார்.

1987 : யாழ்ப்­பா­ணத்தை தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­று­வ­தற்­காக இந்­திய இரா­ணு­வத்தின் ஒப­ரேஷன் பவான் தாக்­குதல் ஆரம்­ப­மா­கி­யது.

1998 : கொங்­கோவில் ஹெலி­கொப்டர் ஒன்று தீவி­ர­வா­தி­களால் சுட்டு வீழ்த்­தப்­பட்­டதில் 40 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2002 : பின்­லாந்தில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப் பில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

(Visited 32 times, 1 visits today)

Post Author: metro