நோர்வூட் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண்களில் பலரின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றங்களால் பீதி!

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இரா­மச்­சந்­திரன்)

ஹட்டன் நோர்வூட் பகு­தியில் இயங்கி வரும் ஆடைத்­தொ­ழிற்­சா­லையில் கட­மை­யாற்றி வரும் யுவ­தி­க ளில் சிலர் மன­நலன் பாதிக்­கப்­பட்­ட­வர்­களைப் போன்று பல­ரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளனர். இந்தச் சம்­பவம் திங்­கட்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது.

குறித்த ஆடைத்­தொ­ழிற்­சா­லையில் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­ன­தாக திடீர் சுக­யீ­ன­முற்ற நிலையில் சுமார் 200 க்கும் மேற்­பட்­ட­வர்கள் மயக்­க­முற்ற நிலையில் வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்­டனர்.

சிகிச்­சையின் போது அவர்­க­ளுக்கு சுவாசத் தடை ஏற்­பட்­ட­தாக கண்­ட­றி­யப்­பட்­டது. தொழிற்­சா­லையில் காற்­றோட்­ட­மற்ற நிலையில் யுவ­திகள் தொழில் புரிந்து வந்­த­மை­யி­னா­லேயே சுவா­சத்­தடை ஏற்­பட்டு மயக்­க­முற்­றனர் என கருதி தொழிற்­சாலை புன­ர­மைக்­கப்­பட்டு காற்­றோட்டம் கொண்ட தொழிற்­சா­லை­யாக மாற்­றப்­பட்­டது.

எனினும் சுக­யீ­ன­முற்று சிகிச்சை பெற்று நேற்று முன்­தினம் மீண்டும் பணிக்கு திரும்­பிய யுவ­தி­களில் சிலர் தங்­க­ளது பணியை ஆரம்­பித்து சிறிது நேரத்தின் பின்னர் ஒரு­வரை ஒருவர் முறைத்து பார்த்­துக்­கொள்­வதும் கழுத்து பகு­தியை இறுக்கி பிடிப்­ப­து­மான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

அது மாத்­தி­ர­மின்றி கூக்­கு­ர­லிட்டும் கூச்­ச­லிட்டு சிரிப்­ப­து­மான செயல்­க­ளிலும் ஈடு­பட்­டுள்­ளனர். குறித்த தொழிற்­சா­லையில் பணி புரியும் 20 யுவ­திகள் இவ்­வா­றான செயல்­களில் ஈடு­பட்­ட­மை­யினால் அச்சம் கொண்ட அனை­வரும் தொழிற்­சா­லை­யி­லி­ருந்து வெளி­யே­றி­ய­தோடு கூச்­ச­லிட்­ட­வர்கள் மாத்­திரம் தொழிற்­சா­லை­யி­லி­ருந்து வெளி­யே­ற­வில்லை என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அனை­வரும் வெளி­யே­றிய பின்னர் கூச்­ச­லிட்­ட­வர்கள் தொழிற்­சாலை முழு­வதும் ஓடித்­தி­ரிந்து தமது விருப்­பத்­துக்கும் சப்­த­மிட்டு கதைப்­பதும் காற்­றி­டை­வெ­ளியில் சைகையில் உரை­யா­டு­வதும் புன்­ன­கைப்­ப­து­மாக செயற்­பட்­டுள்­ளனர்.

யுவ­தி­களின் செயற்­பாட்­டினை கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் நோர்வூட் பொலி­ஸா­ருக்கு அறி­வித்த பின்னர் டிக்­கோயா மாவட்ட வைத்­தி­ய­சாலை வைத்­தி­யர்­களும் வர­வ­ழைக்­கப்­பட்­டனர்.

யுவ­தி­களை சிகிச்­சைக்கு உட்­ப­டுத்­திய வைத்­தி­யர்கள் பின்னர் யுவ­திகள் பயந்த நிலையில் உள­வியல் பாதிப்­புக்­குள்­ளா­கி­யதை உணர்ந்­துள்­ளனர். இதன் பின்னர் யுவ­தி­களை மன­நல வைத்­தி­யர்­க­ளிடம் சிகிச்­சைக்கு உட்­ப­டுத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

(Visited 157 times, 1 visits today)

Post Author: metro