தரம் மற்றும் உற்­பத்­தித்­தி­ற­னுக்­கான தேசிய மாநாடு விரு­துகள் 2017 இல் Atlas Axillia நான்கு தங்­கங்­களை வென்­றது

தரம் மற்றும் உற்­பத்­தித்­திறன் விரு­துகள் 2017 (NCQP) வழங்கும் நிகழ்வில் Atlas Axillia Pvt Ltd நான்கு தங்க விரு­து­களை வென்­றி­ருந்­தது.

தரம் மற்றும் உற்­பத்­தித்­தி­றனை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான இலங்கை சம்­மே­ள­னத்­தினால் வரு­டாந்தம் இந்த விரு­துகள் வழங்கும் நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­ப­டு­கி­றது. நிறு­வ­னத்தில் பணி­யாற்றும் நிறை­வேற்று அதி­கா­ர­மற்ற ஊழி­யர்­களால் குறித்த நிறு­வ­னத்தின் வளர்ச்­சிக்கு பங்­க­ளிப்பு வழங்கும் தேசிய நிகழ்­வாக இந்த நிகழ்வு அமைந்­துள்­ளது.

Kaizen பரிந்­துரை பிரிவில் Atlas Axillia மூன்று தங்க விரு­து­களை தன­தாக்­கி­யி­ருந்­த­துடன், Quality Circles பிரிவில் ஒரு தங்க விரு­தையும் தன­தாக்­கி­யி­ருந்­தது. இத­னூ­டாக நிறு­வனம் தனது தயா­ரிப்­புகள் மற்றும் செயன்­மு­றைகள் ஆகி­ய­வற்றில் காண்­பிக்கும் அர்ப்­ப­ணிப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்­துள்­ளது.

இந்த மாநாட்டின் மூல­மாக Six Sigma மற்றும் Kaizen போன்ற quality circlefis பின்­பற்றும் தனி­ந­பர்­க­ளுக்கும், அணி­யி­ன­ருக்கும் கௌர­விப்பை வழங்கும் வகையில் அமைந்­துள்­ள­துடன், நிறு­வ­னத்தின் உற்­பத்தி மற்றும் செயற்­பா­டுகள் செயன்­மு­றைகள் போன்­ற­வற்றில் மொத்த தர முகா­மைத்­துவ கவ­னத்தை செலுத்தும் வகையில் அமைந்­துள்­ளது.

2017 விரு­துகள் வழங்கும் நிகழ்வு, Quality circles, continuous improvement மற்றும் Six Sigma, Kaizen suggestions மற்றும் Poster போட்டி ஆகிய பிரி­வு­களில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. QC அணி­களால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த மீளாய்­வுகள் மற்றும் அறிக்­கை­களின் மூல­மாக விரு­து­க­ளுக்­காக வெற்­றி­யா­ளர்கள் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

Atlas Axillia பிர­தம நிறை­வேற்று அதி­காரி முஹம்மட் ஹம்ஸா கருத்துத் தெரிவிக்கையில், “Quality Circles மற்றும் Kaizen பிரி­வு­க­ளுக்கு தங்க விரு­து­களை வெற்­றி­யீட்­டு­வது என்­பது சிறந்த சாத­னை­யாகும். எமது அணி­யினர் தொடர்பில் நாம் அதி­க­ளவு பெருமை கொள்­வ­துடன், இவர்கள் தொடர்ச்­சி­யாக உயர் மட்ட அர்ப்­ப­ணிப்பை வெளிப்­ப­டுத்தி வரு­வ­த­னூ­டாக, இந்த விரு­து­களில் எமக்கு விரு­து­க­ளையும் பெற்­றுத்­தந்­தி­ருந்­தனர்” என்றார்.

Atlas Axillia பிர­தம செயற்­பாட்டு அதி­காரி விராஜ் ஜய­சூ­ரிய தெரி­விக்­கையில், “தரம், வினைத்­திறன் மற்றும் நிலை­பே­றான செயற்­பா­டுகள் போன்­ற­வற்றில் நீண்ட கால­மாக Atlas கம்­பனி காண்­பிக்கும் அர்ப்­ப­ணிப்­புக்கு கிடைத்த சாதனையாக இது அமைந்துள்ளது.

 

Atlas Axillia வில் எமது ஊழியர்கள் பெறுமதி வாய்ந்த சொத்துக்களாக காணப்படுகின்றனர். எமது அணியினர் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், வெற்றிகரமான செயற்பாட்டுக்கும் அதிகளவு வலுவூட்டப்பட்டுள்ளதுடன், ஊக்கப்படுத்தப்பட்டுள்ளனர்.” என்றார்.

(Visited 67 times, 1 visits today)

Post Author: metro