ஐ.சி.சி. மகளிர் சம்­பி­யன்ஷிப் கிரிக்கெட் இன்று ஆரம்பம் முத­லா­வது தொடரில் மே. தீவுகள் – இலங்கை அணிகள்

மேற்­கிந்­தியத் தீவுகள் மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையில் இன்று நடை­பெ­ற­வுள்ள முத­லா­வது மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­யுடன் சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) மகளிர் சம்­பி­யன்ஷிப் போட்­டிகள் ஆரம்­ப­மா­கின்­றன.

2014 – 2016 மகளிர் கிரிக்கெட் பரு­வ­கா­லத்தில் நடத்­தப்­பட்ட அதே முறைமை அடிப்­ப­டையில் மகளிர் சம்­பி­யன்ஷிப் போட்டி இம்­ மு­றையும் நடை­பெ­ற­வுள்­ளது.

இப் போட்­டிகள் சொந்த மண் அல்­லது அந்­நிய மண் என்ற அடிப்­ப­டையில் நடை­பெறும்.

 

அவுஸ்­தி­ரே­லி­யா, இங்­கி­லாந்­து, இந்­தி­யா, நியூ­ஸி­லாந்­து, பாகிஸ்­தான், தென் ஆபி­ரிக்­கா, இலங்­கை, மேற்­கிந்­தியத் தீவுகள் ஆகிய எட்டு நாடுகள் சம்­பி­யன்ஷிப் போட்­டியில் ஒன்றை ஒன்று எதிர்த்­தாடும்.

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களை 2021இல் முன்­னின்று நடத்தும் நியூ­ஸி­லாந்­துடன் சம்­பி­யன்ஷிப் தொடர் முடிவில் மூன்று முன்­னணி நாடுகள் ஐ.சி.சி. உலகக் கிண்ணப் போட்­டி­களில் விளை­யாட நேரடி தகு­தி­பெறும்.
மற்­றைய நான்கு நாடு­களும் ஆபி­ரிக்­கா, ஆசி­யா, கிழக்கு ஆசிய பசு­பிக், ஐரோப்பா ஆகிய பிராந்­தி­யங்­களைச் சேர்ந்த ஆறு நாடு­க­ளுடன் மகளிர் உலகக் கிண்ண தகு­திகாண் சுற்றில் விளை­யாடும்.

இது இவ்­வா­றி­ருக்­க, 2021 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளுக்கு நேரடி தகு­தி­பெ­று­வ­தற்­கான முயற்­சியை மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ராக இன்று ஆரம்ப­மாகும் தொட­ருடன் இலங்கை ஆரம்­பிக்­க­வுள்­ளது.

இந்த இரண்டு அணி­க­ளுக்கும் இடை­யி­லான மூன்று மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களும் தரூ­பா, பிறயன் லாரா கிரிக்கெட் கல்­வி­யக மைதா­னத்தில் இன்றும் வெள்­ளிக்­கி­ழ­மையும் எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழ­மையும் நடை­பெ­ற­வுள்­ளன.

இங்­கி­லாந்தில் நடை­பெற்ற அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் ஆட்­ட­மி­ழக்­காமல் 178 ஓட்­டங்­களைக் குவித்த சமரி அத்­தப்­பத்­து­வுடன் அணித் தலைவி இனோக்கா ரண­வீ­ர, முன்னாள் அணித் தலைவி ஷஷி­கலா சிறி­வர்­த­ன, ஸ்ரீபாலி வீரக்­கொடி ஆகியோர் இலங்கை மகளிர் அணியில் முக்­கிய வீராங்­க­னை­க­ளாக இடம்­பெ­று­கின்­றனர்.

 

இலங்கை மகளிர் குழாம்

இனோக்கா ரண­வீர (அணித் தலைவி)இ ஸ்ரீபாலி வீரக்­கொடி (உதவி அணித் தலைவி), ரெபெக்கா வெண்டர்ட் (விக்கெட் காப்­பாளர்), ப்ரசா­தனி வீரக்­கொ­டி, சமரி அத்தப்பத்து, டிலானி மனோதரா, நிப்புனி ஹன்சிகா, ஹசினி பெரேரா, யஷோதா மெண்டிஸ், சந்திமா குணரத்ன, ஹன்சிமா கருணாரத்ன, ஷஷிகலா, அமா காஞ்சனா, அச்சினி குலசூரிய, உதேஷிகா பபோதினி.

 

(Visited 43 times, 1 visits today)

Post Author: metro