படகுப் பாதை சேவையை இல­வ­ச­மாக வழங்­கு­மாறு கோரி ஆர்ப்­பாட்டம்

(செங்கலடி நிருபர்)

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கிரான் பிர­தே­சத்­துக்கு உட்­பட்ட திகி­லி­வட்டை  படகுப் பாதைச் சேவையை இல­வ­ச­மாக வழங்­கு­மாறு கோரி இன்று பிர­தேச மக்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். திகி­லி­வட்டை கிராம அபி­வி­ருத்திச் சங்­கத்தின் ஏற்பாட்டில் திகி­லி­வட்டை துறை அருகில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்தில் நூற்­றுக்­க­ணக்­கான பொது­மக்கள் கலந்­து­கொண்­டனர்.

திலி­கி­வட்டை, கோரா­வெளி, குடும்­பி­மலை, பெரி­ய­வட்­டுவான் உட்­பட பல கிரா­மங்­களைச் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான பொது மக்கள் தினமும் இந்தப் பாதை ஊடா­கவே பயணம் செய்­கின்­றனர். பய­ணத்­துக்காக ஒரு வழிப்­பா­தைக்கு ஒரு­வ­ருக்கு தலா 10 ரூபாவும், சைக்கிள் மற்றும் வாக­னங்­க­ளுக்கு வேறா­கவும் கட்­ட­ணங்கள் அற­வி­டப்­ப­டு­கின்­றன. வெள்ளம் ஏற்படும் காலங்களில் மேலதிக கட்டணங்களும் அறவிடப்படுகின்றன.

  

(Visited 37 times, 1 visits today)

Post Author: metro