சார்ஜாவில் மனைவியை அசிட் வீசி கொலை செய்த இலங்கையர் கைது!

(ரெ.கிறிஷ்­ணகாந்)

ஐக்­கிய அரபு இரா­ஜிய சார்ஜா நகரில் தனது மனைவி மீது அசிட் தாக்­குதல் நடத்திக் கொலை செய்த இலங்­கையர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக வெளி­நாட்டு ஊட­க­மொன்று தகவல் வெளி­யிட்­டுள்­ளது.

உயி­ரி­ழந்த 25 வய­தான பெண் தனது கள்ளக் காத­ல­னுடன் இருந்த வேளையில், அப்பெணின் சட்­ட­ரீ­தி­யான கண­வ­ரா­லேயே இவ்­வாறு அசிட் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

அப்­பெண்­ணுடன் இருந்த அவ­ரது கள்ளக் காத­ல­னான 23 வய­தான இளை­ஞ­ருக்கும் இந்த அசிட் தாக்­கு­தலில் கடு­மை­யான எரி­கா­யங்கள் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தற்­போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்றார் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உயி­ரி­ழந்த பெண்ணின் உடலில் நூற்­றுக்கு சுமார் 30 வீதத்­துக்கும் அதி­க­ள­வான பகு­திகள் எரி­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­ய­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­வித்­த­தாக அவ்­வூ­டகம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்­பாக சார்ஜா நக­ரி­லுள்ள வீடொன்றில் இந்த சம்­பவம் இடம்­பெற்­றி­ருந்த நிலையில் சம்­ப­வத்தில் அசிட் தாக்­கு­த­லுக்கு இலக்­காகி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்­று­வந்த குறித்த பெண் நேற்­று­முன்­தினம் உயி­ரி­ழந்­துள்ளார். உடலில் அதி­க­ள­வான காயங்கள் ஏற்­பட்­டி­ருந்­த­மை­யினால் இத­யத்தின் செயற்­பாடு குறை­வ­டைந்த நிலையில் அவர் உயி­ரி­ழந்­த­தாக வைத்­தி­யர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

சம்­பவம் தொடர்பில், உயி­ரி­ழந்த பெண்ணின் கண­வ­ரான 30 வய­தான இலங்­கையர், அந்­நாட்­டி­லி­ருந்து தப்பிச் ‍செல்ல முற்­பட்ட வேளையில் சார்ஜா பாது­காப்பு பிரி­வி­னரால் விமான நிலை­யத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சந்தேகநபருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

(Visited 81 times, 1 visits today)

Post Author: metro