அரசுக்குத் தேவையான நிதியை பிணை முறி ஊடாக திரட்ட நாம் ஆலோசனை வழங்கவில்லை: – மலிக், கபீர் ஹாசிம் சாட்சியம்

(எம்.எப்.எம்.பஸீர்)

15 பில்­லியன் ரூபா நிதித் தேவையை சர்ச்­சைக்­கு­ரிய பிணை முறி கொடுக்கல் வாங்­கல்கள் ஊடாக நிவர்த்தி செய்ய தாம் ஒரு போதும் முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ர­னுக்கு ஆலோ­சனை வழங்­க­வில்லை என சர்­வ­தேச வர்த்­தகம் மற்றும் அபி­வி­ருத்தி மூலோ­பாய அமைச்சர் மலிக் சம­ர­விக்­ரம, அரச தொழில் முயற்­சி­யாண்மை அமைச்சர் கபீர் ஹாசிம் ஆகியோர் நேற்று ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்­தனர்.

எவ்­வா­றா­யினும், நெடுஞ்சா­லைகள் நிர்­மாணம் தொடர்பில் அர­சாங்­கத்­துக்கு 18 பில்­லியன் ரூபா அப்­போது தேவைப்­பட்­டமை, அதில் 3 பில்­லியன் ரூபா அர­சாங்­கத்­திடம் இருந்­தமை ஆகி­யவை தொடர்பில் சர்ச்­சைக்­கு­ரிய பிணை முறி விநி­யோ­கத்­துக்கு முதல் நாள் காலையில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் பேசப்­பட்­ட­தா­கவும் அவ்­விரு அமைச்­சர்­களும் சாட்­சி­ய­ம­ளித்­தனர்.

பிணை முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­க­ளான உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் கே.டி.சித்­ர­சி­றியின் தலை­மையில் நீதி­ய­ரசர் பிர­சன்ன ஜய­வர்­தன மற்றும் ஓய்­வு­பெற்ற கணக்­காய்­வாளர் நாயகம் வேலுப்­பிள்ளை கந்­த­சாமி ஆகியோர் முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்கும் போதே அவர்கள் இதனை தெரி­வித்­தனர்.

 

இதன்­போது ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்கள் கேட்ட குறுக்கு கேள்வி ஒன்­றுக்கு பதி­ல­ளித்த அமைச்சர் மலிக் சம­ர­விக்­ரம, அர்ஜுன் அலோ­சி­ய­ஸி­ட­மி­ருந்தோ அவரின் நிறு­வ­ன­மான பேப்­ப­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்தோ தனது கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எந்த சந்­தர்ப்­பத்­திலும் நிதி பெறப்­ப­ட­வில்லை என சுட்­டிக்­காட்­டினார்.

நேற்று முன் தினம் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு விடுத்த அறி­வித்­தலின் பிர­காரம் சர்­வ­தேச வர்த்­தகம் மற்றும் அபி­வி­ருத்தி மூலோ­பாய அமைச்சர் மலிக் சம­ர­விக்­ரம, அரச தொழில் முயற்­சி­யாண்மை அமைச்சர் கபீர் ஹாசிம் ஆகியோர் நேற்றுக் காலை ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் முன்­னி­லை­யா­கினர். அங்கு தலா 10 நிமி­டங்கள் வரை அவர்கள் சாட்­சியம் அளித்­தனர்.

குறிப்­பாக சர்ச்­சைக்­கு­ரிய பிணை முறி விநி­யோகம் இடம்­பெற்ற நாளுக்கு முன்­னைய தினம் அதா­வது 2015 பெப்­ர­வரி 26 ஆம் திகதி காலை வேளையில் அப்­போ­தைய நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க, முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் ஆகி­யோ­ருடன் நடை­பெற்ற சந்­திப்பு குறித்து இதன்­போது இரு அமைச்­சர்­க­ளி­டமும் அரச சட்­ட­வா­தி­களால் கேள்வி எழுப்பப்­பட்­டது.

குறித்த உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற சந்­திப்பு குறித்து இதன்­போது இரு அமைச்­சர்­களும் பதில் வழங்­கி­ய­துடன் அந்தச் சந்­திப்­பின்­போது ஒரு போதும் பிணை முறி ஊடாக அர­சாங்­கத்­துக்கு தேவைப்­பட்ட நிதியை திரட்ட தாம் ஆலோ­சனை வழங்­க­வில்லை என அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இதே­வேளை, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க மற்றும் மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் ஆகியோர் தொடர்­பாக பேப்­ப­சுவல் ட்ர்சரீஸ் நிறுவனம் பேணி­ய­தாக கூறப்­படும் இரு கோவை­க­ளையும் உட­ன­டி­யாக ஆணைக் குழுவில் முன்­னி­லைப்­ப­டுத்த பிணை முறி மோசடி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு நேற்று உத்­த­ர­விட்­டது.

 

பேப்­ப­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் முன்னாள் பணிப்­பாளர் அர்­ஜுன அலோ­சியஸ் மற்றும் அவ­ரது தந்­தை­யான ஜெப்ரி ஜோசப் அலோ­சியஸ் ஆகி­யோ­ருக்கே இது தொடர்­பி­லான அறி­வித்­தலை ஆணைக் குழு நேற்று பிறப்­பித்­தது.

இத­னை­விட குறித்த இரு கோவைகள் தொடர்­பிலும் தனக்கு தெரிந்த அனைத்துத் தக­வல்­க­ளையும் சத்­தியக் கட­தாசி ஒன்றின் ஊடாக ஆணைக் குழு­வுக்கு அறி­யத்­த­ரு­மாறு பிணை முறி மோசடி தொடர்­பி­லான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு அர்­ஜுன அலோ­சி­யஸின் தனிப்­பட்ட செய­லா­ள­ராக செயற்­பட்ட ஸ்டீவ் சாமு­வே­லுக்கு நேற்று உத்­த­ரவு பிறப்­பித்தது.

 

இதே­வேளை, முன்­ன­தாக அர்­ஜுன அலோ­சி­ய­ஸி­ட­மி­ருந்து சி.ஐ.டி. கைப்­பற்­றிய தொலை­பே­சி­க­ளி­லி­ருந்து பரி­மாற்­றப்­பட்ட குறுஞ்­செய்­தி­க­ளுக்கு அமை­வாக பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் ஆகியோர் தமது நிறுவனம் தொடர்பில் செய்ய வேண்டிய நடவடிக்கைகளுக்காக தனித் தனியான கோவைகளை பேணியமை தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்திருந்தது. இந் நிலையிலேயே அவ்விரு கோவைகளையும் தற்போது ஆணைக் குழு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 60 times, 1 visits today)

Post Author: metro