கட்டுநாயக்கவில் சீரற்ற காலநிலையினால் மத்தளையில் தரையிறங்கிய விமானங்கள்

(ரெ.கிறிஷ்­ணகாந்)

கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் தரை­யி­றங்­க­வி­ருந்த இரு விமா­னங்கள் சீரற்ற கால­நி­லையின் கார­ண­மாக நேற்று மத்­தளை விமான நிலை­யத்தை நோக்கி திருப்­பி­ய­னுப்­பப்­பட்­ட­தாக கட்­டு­நா­யக்க விமான நிலைய கடமை நேர முகா­மை­யாளர் தெரி­வித்தார்.

 

சென்­னை­யி­லி­ருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்­லைன்ஸ்சுக்கு உரித்­தான யூ.எல். 122 என்ற விமா­னமும் சீசெல்­ஸி­லி­ருந்து வந்த கட்­டு­நா­யக்க வந்த யூ.எல். 708 என்ற விமா­ன­முமே நேற்­றைய தினம் காலை 11. 20 மணி­ய­ளவில் கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் தரை­யி­றக்க ஆயத்­த­மாக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் தரை­யி­றக்­கத்­துக்கு பொருத்­த­மற்ற வகையில் கால­நிலை காணப்­பட்­டதால் அவ்­விரு விமா­னங்­களும் மத்­தளை விமான நிலை­யத்­துக்கு திருப்­பி­ய­னுப்­பப்­பட்­டன.

எனினும், இந்த இரண்டு விமா­னங்­களை தவிர மற்­றைய விமா­னங்கள் அனைத்து உரிய வகையில் எந்த தடங்­களும் இன்றி கட்­டு­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வழமை போல தரை­யி­றக்­கப்­பட்­டி­ருந்­தன.

நாட்டின் சில பாகங்­களில் ஆங்­காங்கே மழை பெய்­கின்ற போதிலும் மத்­தளை விமான நிலை­யத்தை அண்­டிய பகு­தி­களில் சீரான கால­நிலை நில­வி­ய­மையால் குறித்த இரு விமா­னங்­களும் அவ்­வி­மான நிலை­யத்தை நோக்கி தரை­யி­றக்­கப்­பட்­ட­தா­கவும், இதற்கு முன்னர் இரு விமான நிலை­யங்­க­ளிலும் விமா­னங்­களை தரை­யி­றக்க முடி­யாது போன சந்­தர்ப்­பங்­களில் இலங்கை விமா­னங்கள் இந்­திய விமான நிலையங்களை நோக்கி திருப்பி அனுப்பப்பட்டு தரையிறக்கப்பட்டிருந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.

(Visited 54 times, 1 visits today)

Post Author: metro