2018 பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான மகாராணியின் கோல் இன்று இலங்கை வருகிறது

(நெவில் அன்­தனி)

அவுஸ்­தி­ரே­லி­யாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடை­பெ­ற­வுள்ள 2018 பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழா­வுக்­கான மகா­ரா­ணி­யாரின் செய்தி தாங்­கிய கோல் இலங்­கைக்கு இன்று வரு­கின்­றது.

 

நான்கு வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை நடை­பெறும் பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழா­வுக்கு முன்­னோ­டி­யாக மகா­ரா­ணி­யாரின் கோல் பொது­ந­ல­வாய விளை­யாட்­டுத்­துறை சம்­மே­ளன நாடு­க­ளுக்கு கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றது.

 

மகா­ரா­ணி­யாரின் கோல் பங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து விமானம் மூலம் பிற்­பகல் 3.55 மணி­ய­ளவில் கட்­டு­நா­யக்க விமான நிலையம் வந்­த­டையும். பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் ஜேம்ஸ் டோரிஸ், விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர, இலங்கை பொது­ந­ல­வாய விளை­யாட்­டுத்­துறை சங்கத் தலை­வரும் ஆசிய பிராந்­திய உதவித் தலை­வ­ரு­மான, ஹேம­சிறி பெர்­னாண்டோ ஆகியோர் மகா­ரா­ணி­யாரின் கோலை பொறுப்­பேற்பர்.

 

விமான நிலை­யத்­தி­லி­ருந்து இந்தக் கோல் ஜனா­தி­பதி இல்­லத்­திற்கு கொண்டு செல்­லப்­படும் என இலங்கை பொது­ந­ல­வாய விளை­யாட்­டுத்­துறை சங்கத் தலை­வரும் சங்­கத்தின் ஆசிய பிராந்­திய உதவித் தலை­வ­ரு­மான ஹேம­சிறி பெர்­னாண்டோ தெரி­வித்தார்.

 

மகா­ரா­ணி­யாரின் கோல் காலி நக­ருக்கு விசேட ரயில் வண்டி மூலம் நாளை கொண்டு செல்­லப்­படும் என அவர் மேலும் கூறினார். சனிக்­கி­ழமை மீண்டும் கொழும்பு வந்­த­டையும் மகா­ரா­ணி­யாரின் கோல், றோயல் உள்­ளக அரங்கில் காட்­சிக்கு வைக்­கப்­படும்.

 

அதனைத் தொடர்ந்து பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்­திற்கு பிற்­பகல் 4.00 மணிக்கு கொண்டு செல்­லப்­படும். இறு­தி­யாக சுதந்­திர சதுக்­கத்தில் முடிவு விழா வைபவம் நடத்­தப்­பட்டு மகா­ரா­ணி­யாரின் கோல் மலே­சி­யா­வுக்கு அனுப்பி வைக்­கப்­படும்.

கடந்த மார்ச் மாதம் ஆரம்­ப­மான மகா­ரா­ணி­யாரின் செய்தி தாங்­கிய கோல் தொடர் ஓட்டம் 388 தினங்கள் தொட­ர­வுள்­ள­துடன், பொது­ந­ல­வாய நாடுகள் மற்றும் எல்­லை­க­ளுக்கு மொத்­த­மாக 230,00 கிலோ மீற்­றர்கள் பணிக்­க­வுள்­ளது. இவ் வருடம் கிறிஸ்மஸ் தினத்­தன்று மகா­ரா­ணி­யாரின் கோல் அவுஸ்­தி­ரே­லி­யாவை சென்­ற­டை­ய­வுள்­ளது.

 

அங்கு பல்வேறு பிராந்தியங்களுக்கும் நகரங்களுக்கும் கொண்டு செல்லப்படும் மகாரா ணியாரின் கோல், பொதுநலவாய விளையாட்டு விழா 2018 ஆரம்பதினமான ஏப்ரல் 4ஆம் திகதிக்கு சில தினங் களுக்கு முன்னர் கோல்ட் கோஸ்ட் சென்றடையும்.

(Visited 85 times, 1 visits today)

Post Author: metro