மட்டு. மாவட்டத்தில் 2 வருடங்களில் 17 தற்கொலைகள்! 430 பெண்களும் 200 ஆண்களும் தற்கொலைக்கு முயற்சி

(காங்கேயனோடை நிருபர்)

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கடந்த 2015 மற்றும் 2016 ஆகிய இரண்டு ஆண்­டு­களில் 2323 தற்­கொலை முயற்­சிகள் இடம்­பெற்­றுள்­ள­துடன், 79 தற்­கொலைச் சம்­ப­வங்கள் இடம் பெற்றுள்ள­தாக மட்­டக்­க­ளப்பு தொழில்சார் உள­நல உதவி நிலையம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மட்­டக்­க­ளப்பு வலயக் கல்வித் திணைக்­க­ளத்தின் அனு­ச­ர­ணை­யுடன் மட்­டக்­க­ளப்பு தொழில்சார் உள­நல உதவி நிலையம் தொகுத்து வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது கடந்த 2015ஆம் ஆண்டில் 37 பேர் தற்­கொலை செய்­துள்­ள­துடன் 18வய­துக்­குட்­பட்ட 420 பேர் தற்­கொ­லைக்கு முயற்­சித்­துள்­ள­துடன், இதில் 120 ஆண்­களும் 280 பெண்­களும் அடங்­கு­கின்­றனர்.

இந்த ஆண்டில் 18வயது தொடக்கம் 50 வய­துக்கு உட்­பட்ட 630 பேர் தற்­கொ­லைக்கு முயற்­சித்­துள்­ள­துடன் இதில் 200 ஆண்­களும், 430 பெண்­களும் அடங்­கு­கின்­றனர்.

50 வய­துக்கு மேற்­பட்­டோரில் 250 பேர் தற்­கொ­லைக்கு முயற்­சித்­துள்­ள­துடன் இதில் 90 ஆண்­களும் 160 பெண்­களும் அடங்­கு­கின்­றனர்.

அதே போன்று 2016ஆம் ஆண்டில் 42பேர் தற்­கொலை செய்­துள்­ள­துடன் 18வய­துக்கு உட்பட்ட 219 பேர் தற்­கொலை செய்து கொள்ள முயற்­சித்­துள்­ளனர். 18வயது தொடக்கம் 50 வய­துக்­குட்­பட்ட 732 பேர் தற்­கொ­லைக்கு முயற்­சித்­துள்­ள­துடன் இதில் 203 ஆண்­களும், 429 பெண்­களும் அடங்­கு­கின்­றனர்.

50 வய­துக்கு மேற்­பட்­டோரில் 72 பேர் தற்­கொ­லைக்கு முயற்­சித்­துள்­ள­தா­கவும் அதில் 35 ஆண்­களும், 37 பெண்­களும் அடங்­கு­வ­தா­கவும் அந்த ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குடும்ப உறுப்­பி­னர்­க­ளுடன் அன்­றாட நிகழ்­வுகள் மற்றும் எதிர் கொண்ட பிரச்­சி­னை­களை பகிர்ந்து கொள்ளல், சமா­ளிக்க முடி­யாத பிரச்­சி­னைகளை எதிர் கொள்ளும் போது பொருத்­த­மான உள­வ­ளத்­து­ணை­யா­ளரின் ஆலோ­ச­னையைப் பெற்றுக் கொள்ளல் தேவைக்கேற்பதுறைசார் தேர்ச்­சி­யா­ளர்­க­ளிடம் ஆலோ­ச­னை­களை பெற்றுக் கொள்ளல், சகபாடிகள் மற்றும் நண்­பர்­களுடன் உரை­யா­டுதல், சமய சடங்­கு­களில் கருத்­துடன் பங்­கு­பற்றல், போதி­ய­ளவு ஓய்­வெ­டுத்தல், உடலை நன்கு பராமரித்தல், தேவைக்கேற்ப மருத்துவ ஆலோசனையை பெறுதல் போன்ற பராமரிப்புக்கள் தற்கொலையை தடுப் பதற்கான நடவடிக்கைகளாகு மென வும் அந்த அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளது.

(Visited 55 times, 1 visits today)

Post Author: metro