விளக்கமறியல் கைதியை தாக்கிய சிறை அதிகாரி; படுகாயமடைந்தவருக்கு அவசர சத்திர சிகிச்சை

(எம்.எப்.எம்.பஸீர்)

வாரி­ய­பொல சிறைச்­சா­லையில் விளக்­க­ம­றியல் கைதி­யாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த சந்­தே­க­நபர் ஒரு­வரை அச்­சி­றைச்­சா­லையின் அதி­காரி ஒருவர் கொடூ­ர­மாக தாக்­கிய சம்­பவம் தொடர்பில் விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. தனது அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்யும் வகையில் குறித்த அதி­காரி நடந்­து­கொண்­டாரா என்­பதை கண்­ட­றி­யவும் தாக்­குதல் நடத்­தப்­பட்­டதன் நோக்கம், பின்­ன­ணியை வெளிப்­ப­டுத்­தவும் இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்ப்ட்­டுள்­ள­தா­கவும் சிறைச்­சா­லைகள் ஊடகப் பேச்­சாளர் சிறைச்­சாலை ஆணை­யாளர் துஷார உபுல் தெனிய கேச­ரிக்கு தெரி­வித்தார்.

இது தொடர்பில் தாக்­குதல் நடத்­தி­ய­தாக கூறப்­படும் சிறை அதி­கா­ரி­யிடம் வாக்கு மூலம் ஒன்று பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும்இ மேலும் சில வககு மூலங்கள் பதிவு செய்­யப்­ப­ட­வுள்ள நிலையில் அந்­ந­ட­வ­டிக்­கை­களின் பின்­னர்இ சிறைச்­சா­லைகள் கட்­டளைச் சட்­டத்தின் விதிகள் மற்றும் அதி­கா­ரங்­களை மீறி குறித்த சிறை அதி­காரி செயற்­பட்­டி­ருப்­பது தெரிய வந்தால் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்னர், கழிவுத் தேயிலை விவ­காரம் தொடர்பில் பொலி­ஸாரால் சந்­தேக நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். குறித்த சந்­தேக நபரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நிக்­க­வ­ரட்­டிய நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்ள நிலையில் அந்த சந்­தேக நபர் வாரி­ய­பொல சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.

இந் நிலையில் கடந்த வாரம், குறித்த சந்­தேக நபரை சிறைச்­சா­லையின் அதி­கா­ரி­யொ­ருவர் அதி­காலை வேளை கொடூ­ர­மாக தாக்­கி­யுள்ளார். இதன்­போது படு­கா­ய­ம­டைந்த குறித்த சந்­தேக நபர்இ சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் உட­ன­டி­யாக சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்பட்­டுள்ளார்.

 

எனினும் காயத்தின் தன்­மையை பரி­சீ­லித்­துள்ள சிறை வைத்­திய அதி­கா­ரிகள் உட­ன­டி­யாக அந்த சந்­தேக நபரை குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பி­யுள்­ளனர். இந் நிலையில் அங்கு சந்­தேக நப­ருக்கு விசேட சத்­தி­ர­சி­கிச்­சை­களும் செய்­யப்­பட்­டுள்­ளன.

சிறை அதி­கா­ரியின் தாக்­குதல் கார­ண­மாக காய­ம­டைந்த சந்­தேக நப­ருக்­குஇ வைத்­தி­ய­ரிடம் குளி­ய­ல­றையில் வழுக்கி வீழ்ந்­த­தாக குறித்த அதி­கா­ரியால் அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் எனினும் வைத்­தி­யர்­க­ளிடம் குறித்த சந்­தேக நபர் நடந்­த­வற்றை தெரி­வித்­துள்ள நிலையில் மருத்துவ அறிக்கைகள் ஊடாகவும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந் நிலை­யி­லேயே இது தொடர்பில் குறித்த சிறை அதி­கா­ரிக்கு எதி­ராக விஷேட விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

(Visited 71 times, 1 visits today)

Post Author: metro