1798: பிரித்­தா­னிய குடி­யேற்ற நாடாக இலங்கை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 12

 

1492 : கரீ­பியன் பிராந்­தி­யத்தின் பஹாமஸ் தீவு­களை கிறிஸ்­டோபர் கொலம்பஸ் அடைந்தார். அவர் கிழக்­கா­சி­யாவை தான் அடைந்­த­தாக எண்­ணினார்.

1798 : இலங்­கை­யா­னது பிரித்­தா­னி­யாவின் அரச குடி­யேற்ற நாடாக (Crown Colony) பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. இலங்­கையின் ஆளு­ந­ராக பிரெ­டெரிக் நோர்த் நிய­மிக்­கப்­பட்டார்.

1799 : பிரான்ஸை சேர்ந்த ஜேன் லெப்ரோஸ் எனும் பெண் 900 அடி உய­ரத்தில் பறந்த பலூ­னி­லி­ருந்து பர­சூட்டில் குதித்த முதல் பெண் ஆனார்.

1901 : அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்­துக்கு அப்­போ­தைய ஜனா­தி­பதி தியோடர் ரூஸ்வெல்ட் “வெள்ளை மாளிகை” என உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பெய­ரிட் டார்.

1918 : அமெ­ரிக்­காவின் மினெ­சோட்டா மாநி­லத்­தி­லி­ருந்து கிளம்­பிய காட்­டுத்­தீ­யினால் 453 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1941 : யுக்­ரைனின் தினி­புரோ பெத்ரோவ்ஸ்க் நகரில் இந்­நா­ளிலும் இதற்கு அடுத்த நாளிலும் நாசி ஜேர்­ம­னி­யினர் 11,000 யூதர்­களைக் கொன்­றனர்.

1964 : சோவியத் ஒன்­றியம் வஸ்கோத் 1 விண்­க­லத்தை விண்­ணுக்கு ஏவி­யது. இதுவே பல விண்­வெளி வீரர்­களை விண்­ணுக்குக் கொண்டு சென்ற முத­லா­வது விண்­க­ல­மாகும்.

1968 : ஸ்பெயி­னி­ட­மி­ருந்து கினியா சுதந்­திரம் பெற்­றது.

1992 : எகிப்தில் பூகம்­பத்­தினால் 210 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1994 : மகெலன் விண்­கலம் வெள்ளிக் கோளின் வளி­மண்­ட­லத்தை அடைந்­த­தை­ய­டுத்து, அத­னு­ட­னான தொடர்­பு­களை நாசா இழந்­தது. இவ்­விண்­கலம் அடுத்­த­டுத்த நாட்­களில் எரிந்து சேத­ம­டைந்­தது.

1999 : பாகிஸ்­தானில் இடம்­பெற்ற இரத்தம் சிந்தாப் புரட்­சியில் பர்வேஸ் முஷாரப் பிர­தமர் நவாஸ் ஷெரீப்பை ஆட்­சியில் இருந்து அகற்றி நாட்டின் அதி­ப­ரானார்.

1999 : உலகின் மக்கள் தொகை 6 பில்­லி­யனை எட்­டி­யது.

 

2000 : அமெ­ரிக்க கடற்­ப­டையின் யூ.எஸ்.எஸ். கோல் கப்பல், யேமனில் தற்­கொலை குண்டுத் தாக்­கு­த­லுக்­குள்­ளா­னதால் 17 பேர் பலி.

2001 : அமை­திக்­கான நோபல் பரிசு ஐ.நா. பொதுச் செயலர் கோபி அனா­னுக்கும், ஐக்­கிய நாடு­க­ளுக்கும் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டது.

2002 : இந்­தோ­னே­ஷி­யாவின் பாலித் தீவில் இரவு விடுதி ஒன்றில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பில் 202 பேர் கொல்­லப்­பட்டு 300 பேர் காய­ம­டைந்­தனர்.

2003 : பெலா­ரஸில் மனநோய் வைத்­தி­ய­சாலை ஒன்றில் இடம்­பெற்ற தீவி­பத்தில் 30 மன­நோ­யாளர் இறந்­தனர்.
2013 : மைக்கல் ஷுமேக்கர் 6 ஆவது தட­வை­யாக போர்­மி­யூலா வன் சம்­பி­ய­னானார்.

2005 : சீனாவின் சென்ஷோ 6, விண்­வெளி வீரர்கள் இரு­வ­ருடன் ஏவப்­பட்­டது. மனி­தர்­க­ளுடன் பய­ணித்த சீனாவின் 2 ஆவது விண்­கலம் இது­வாகும்.

2013 : பெரு நாட்டில் வாக­ன­மொன்று மலைச்­ச­ரிவில் வீழ்ந்­ததால் 51 பேர் உயிரிழந்தனர்.

(Visited 35 times, 1 visits today)

Post Author: metro