ஆடைத்­தொ­ழிற்­சா­லையில் உணவு விஷ­மா­னதால் பாதிக்­கப்­பட்ட 73 பேர் வைத்­தி­ய­சா­லையில் அனு­மதி

(ரெ.கிறிஷ்­ணகாந், செங்­க­ட­கல, வத்­து­காமம் நிரு­பர்கள்)

கண்டி, தலாத்­து­ஓயா, ஹார­கம பிர­தே­சத்தில் அமைந்­துள்ள தனியார் ஆடைத் தொழிற்­சா­லை­யொன்றில் காலை உணவு விஷ­மா­னதன் கார­ண­மாக ஆடைத் தொழிற்­சா­லையில் கட­மை­யாற்றி வந்த 73 பேர் கண்டி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக கண்டி போதனா வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர் வைத்­தியர் சமன் ஜய­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

தனியார் ஆடைத்­தொ­ழிற்­சா­லையில் கட­மை­யாற்­றி­வரும் ஊழி­யர்கள் நேற்­றைய தினம் வழ­மை­போல அங்­குள்ள சிற்­றுண்­டி­சா­லையில் காலை உணவை உட்­கொண்­டுள்­ளனர்.

 

சிறிது நேரத்தின் பின்னர் வாந்தி, வயிற்­றோட்டம் போன்ற நோய் நிலை­மைகள் ஏற்­பட்­ட­த­னை­ய­டுத்து அவ் ஊழி­யர்கள் உட­ன­டி­யாக கண்டி வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டனர். இவர்­களில் சில­ருக்கு மயக்கம் மற்றும் தலை­சுற்றல் போன்ற அறி­கு­றி­களும் தோன்­றி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட 73 ஊழி­யர்­களில் 7 ஆண்­களும், 66 பெண்­களும் அடங்­கு­வ­தா­கவும். உணவு விஷ­மா­னதன் கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­க­ளுக்கு எவ்­வித பார­தூ­ர­மான பாதிப்­பு­களும் ஏற்­ப­ட­வில்­லை­யெ­னவும் வைத்­தியர் ஜய­ரத்ன மேலும் தெரி­வித்தார்.

இந்­நி­லையில், பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­களில் சிலர் வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யி­ருந்து சிகிச்சை பெற்­று­வ­ரு­வ­தா­கவும், நோய்­வாய்ப்­பட்ட ஊழியர் உட்­கொண்ட உணவு மாதி­ரிகள் பரி­சோ­த­னை­க­ளுக்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் தலாத்­து­ஓயா பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு நோய்­வாய்ப்­பட்ட ஊழியர் உட்கொண்ட உணவு மாதிரிகள் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

(Visited 63 times, 1 visits today)

Post Author: metro