பேரா­சி­ரியர் மொஹான் முன­சிங்­க­வுக்கு பிரெஞ்சு அரசின் லீஜன் விருது

கால­நிலை நிபு­ண­ரான பேரா­சி­ரியர் மொஹான் முன­சிங்­க­வுக்கு பிரெஞ்சு அர­சாங்கம் லீஜன் விருது வழங்­கி­யுள்­ளது. கால நிலை மாற்­றத்­துக்கு எதி­ரான போராட்டம் மற்றும் நிலை­யான அபி­வி­ருத்­தியை ஊக்­கு­விப்­ப­தற்கு பேரா­சி­ரியர் மொஹான் முன­சிங்க ஆற்­றிய பங்­க­ளிப்­பு­க­ளுக்­காக அவ­ருக்கு இவ்­வி­ருது வழங்­கப்­பட்­டுள்­ளது.

கொழும்பில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற வைப­வ­மொன்றில், பிரெஞ்சு தூதுவர் ஜீன் மெரின் ஷு, பேரா­சி­ரியர் முன­சிங்­க­வுக்கு இவ்­வி­ருதை வழங்­கினார். லீஜன் விரு­தா­னது சிவில் மற்றும் இரா­ணுவ சேவை­க­ளுக்­காக பிரெஞ்சு அர­சினால் வழங்­கப்­படும் உயர் விரு­தாகும். இவ்­வி­ருது வழங்கல் 1802 ஆம் ஆண்டு அப்­போ­தைய பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபார்ட்டினால் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 31 times, 1 visits today)

Post Author: metro