கன்னடப் படத்தில் நடிக்க மறுத்த ஸ்ருதியை கடுமையாக விமர்சித்த நடிகர்

தற்­போது கன்­னடப் படத்தில் நடிக்கும் எண்­ண­மில்லை எனக் கூறி­ய­மைக்­காக, கன்­னட நடிகர் ஜக்கேஷ் கடு­மை­யாக விமர்­சித்­துள்ளார். “இன்னும் சிறிது காலம் கன்­னடப் படத்தில் நடிக்கும் திட்டம் எனக்கு இல்லை.

இது தொடர்­பாக யாரி­டமும் எவ்­வித விவா­தமும் செய்­ய­வில்லை.” என நடிகை ஷ்ருதி ஹாசன் சில நாள்­க­ளுக்கு முன்பு இது­போன்று டுவீட் செய்தார்.

கன்­னடப் பட­மொன்றில் நடிகை ஸ்ருதி நடிக்­க­வுள்ளார் என்று செய்தி வெளி­யா­ன­தற்கு டுவிட்டர் பக்­கத்தில் இது­போன்ற ஒரு மறுப்பை வெளி­யிட்டார் ஸ்ருதி.  ஆனால் அந்தப் பதிவில், அடுத்தச் சில காலம் கன்னடப் படத்தில் நடிக்கும் திட்டமே தனக்கில்லை என்று அவர் சொன்னது கன்னடத் திரையுலகைக் கடுப்பேற்றியுள்ளது.

கன்னட நடிகர் ஜக்கேஷ், தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்ருதி ஹாசனைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது: “கன்னடத் திரையுலகில் கதாநாயகிகளுக்குப் பஞ்சம் இல்லை.

கன்னடத் திரையுலகில் பணியாற்ற விருப்பப்படாத கதாநாயகிகள் முன்பு மண்டியிட தயாரிப்பாளர்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் கிடையாது. துரதிர்ஷ்டவசமாக நம் மக்கள் இன்னும் பாடம் கற்கவேண்டியுள்ளது.

கர்நாடகாவில் உள்ள கல்லூரிப் பெண்களோடு இந்த கதாநாயகிகளை ஒப்பிட முடியாது. இவர்களை மேக் அப் இல்லாமல் பார்த்தால் நம் இளைஞர்கள் ஓடிவிடுவார்கள். அவர்கள் படம் கர்நாடகத்தில் வெளியாகி அதன் மூலமாக நன்கு வியாபாரம் செய்கிறார்கள். ஆனால் கன்னடப் படத்தில் நடிக்க விரும்புவதில்லை” என்று கூறியுள்ளார்.

(Visited 60 times, 1 visits today)

Post Author: metro