ராஜ­கி­ரி­யவில் சொகுசு கார் மின்­கம்பம் சுவருடன் மோதி­யதில் இருவர் உயி­ரி­ழப்பு

(ரெ.கிறிஷ்­ணகாந்)

ராஜ­கி­ரிய பிர­தே­சத்தில் அதி­சொ­குசு கார் ஒன்று மின்­கம்பம் மற்றும் சுவ­ருடன் மோதுண்டு விபத்­துக்­குள்­ளா­னதில் காரில் பய­ணித்த இருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக வெலிக்­கடை பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

ஹொண்டா வெஸல்ஸ் ரக கார் ஒன்றே நேற்று முன்­தினம் இவ்­வாறு விபத்­துக்­குள்­ளா­கி­யி­ருந்த நிலையில் காய­ம­டைந்­த­வர்கள் வெலிக்­கடை பொலி­ஸாரால் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட நிலையில் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்­ளனர்.

 

இச்­சம்­ப­வத்தில் விபத்­துக்­குள்­ளான கார் பலத்த சேத­ம­டைந்­துள்­ள­துடன் காரின் கியர் கட்­ட­மைப்பு காருக்கு முன்­ப­கு­தியில் வெளியே வந்­துள்­ளது.

கார் விபத்­துக்­குள்­ளான வேளையில் காரினுள் பெருந்­தொ­கை­யான உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு நாண­யங்கள், காசோ­லைகள் மற்றும் பெறு­ம­தி­யான பல பொருட்­களும் காணப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

வெலிக்­கடை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சுதத் அஸ்­ம­டல்­ல­கேவின் உத்­த­ர­வுக்­க­மைய மோசடி ஒழிப்பு பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் உயி­ரி­ழந்­த­வர்­களின் உற­வி­னர்­களை வெலிக்­கடை பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்து காரி­லி­ருந்து மீட்­கப்­பட்ட பணம் உள்­ளிட்ட பெறு­ம­தி­யான பொருட்­களில் வழக்­குக்கு தேவைப்­ப­டாத பொருட்­களை வழங்கி வைத்­தி­ருந்­தனர்.

(Visited 71 times, 1 visits today)

Post Author: metro