சவூ­தியில் ஒரே வீட்டில் இரண்டு தட­வைகள் பணி­யாற்­றிய பெண் சட­ல­மாக அனுப்பி வைப்பு

(ரெ.கிறிஷ்­ணகாந்)

சவூதி அரே­பி­யாவில் வீடொன்றில் இரண்டு வரு­டங்கள் பணிப்­பெண்­ணாக பணி­யாற்­றிய பெண் ஒருவர் நாடு திரும்பி மீண்டும் சவூதி அரே­பி­யாவில் அதே வீட்­டுக்கு பணிப்­பெண்­ணாக சென்ற அப்பெண் 6 மாதங்­களின் பின்னர் சட­ல­மாக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் முறைப்­பா­டொன்று கிடைத்­துள்­ள­தாக கட்­டு­நா­யக்க விமான நிலைய பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

தனது மகளின் மரணம் தொடர்பில் உயி­ரி­ழந்த பச­றையை சேர்ந்த பெண்ணின் தந்தை தெரி­விக்­கையில், தனது மகளின் கைவி­ரல்­களை காய­ம­டையும் வகையில் வெட்டி, கைகளை சுட்டுப் பொசுக்­கி­ய­தான படங்கள் தனது கைத்­தொ­லை­பே­சிக்கு அனுப்­பப்­பட்­டி­ருந்­த­தா­கவும், அது தொடர்பில் தான் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் முறை­யிட்­ட­தை­ய­டுத்து விசா­ர­ணைகள் இடம்­பெற்­று­வரும் நிலையில், தனது மகளின் சடலம் நேற்று முன்­தினம் நாட்­டுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­தென அவர் கட்­டு­நா­யக்க பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

பசறை அர­லி­ய­காவ பிர­தே­சத்தை சேர்ந்த தினுஷி பிரி­யங்கா மஹேஷி டி அல்விஸ் (36) இரு பிள்­ளை­களின் தாயான உயி­ரி­ழந்த பெண், தனது கண­வ­னை­விட்டு பிரிந்து தந்­தையின் வீட்டில் வசித்­து­வந்த நிலையில், சுமார் இரண்­டரை வரு­டங்­க­ளுக்கு முன்னர் சவூதி அரே­பி­யா­வி­லுள்ள தமாம் நக­ரி­லுள்ள வீடொன்­றுக்கு பணிப்­பெண்­ணாக சென்­றுள்ளார்.

இரண்டு வரு­டங்கள் எவ்­வித இன்­னல்­களும் இல்­லாது பணி­யாற்­றி­வந்த அவர் கடந்த 6 மாதங்­க­ளுக்கு முன்னர் ஒரு மாத விடு­மு­றையில் நாடு திரும்­பி­யி­ருந்த நிலையில், விடு­முறை நிறை­வ­டைந்­ததன் பின்னர் மீண்டும் அதே பணி­யி­டத்­துக்கு சென்­றுள்ளார்.

அவர் சவூ­திக்கு சென்று முதல் இரண்டு மாதங்­க­ளுக்கு தமக்கு பணம் அனுப்­பி­ய­தா­கவும், அதன் பின்னர் அவ­ரி­ட­மி­ருந்து எவ்­வித தக­வலும் கிடைத்­தி­ருக்­க­வில்லை என்றும் உயி­ரி­ழந்த பெண்ணின் தந்தை தெரி­வித்­துள்ளார்.

 

பின்னர் தனது மகள் தொடர்பில், அவரை வெளி­நாட்­டுக்கு அனுப்பி வைத்த முகவர் நிலை­யத்தை தொடர்­பு­கொண்டு வின­வி­ய­போது, கடந்த 8 ஆம் திகதி அவர் உயி­ரி­ழந்­த­தாக அறி­வித்­தனர் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில், நேற்­று­முன்­தினம் அதி­காலை 5. 50 மணி­ய­ளவில் சவூ­தி­யி­லி­ருந்து கட்­டு­நா­யக்க விமான நிலையத்தை வந்தடைந்த யூ.எல். 266 என்ற விமானத்தில் வந்த தினுஷி பிரியங்காவின் சடலத்தை பொறுப்பேற்ற அவரது பெற்றோர், அதனை நீர்கொழும்பு ஆதார வைத்திய சாலையின் எடுத்துச் சென்றுள்ளனர்.

(Visited 73 times, 1 visits today)

Post Author: metro