பாகிஸ்தான் – இலங்கை சர்வதேச ஒருநாள் தொடர் துபாயில் முதலாவது போட்டியுடன் இன்று ஆரம்பம்

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள முதலாவது பகல் இரவு போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

பாகிஸ்தானை அதன் இரண்டாவது கிரிக்கெட் சொந்த மைதானமான ஐக்கிய அரபு இராச்சியத்தில் டெஸ்ட் தொடரில் வெற்றிகொண்ட சூட்டோடு இந்தத் தொடரை மிகுந்த நம்பிக்கையுடன் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.

உப்புல் தரங்கவின் தலைமையிலான இலங்கை ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் வெற்றிவாகை சூடியடெஸ்ட் அணியில் இடம்பெற்ற தினேஷ் சந்திமால், சுரங்க லக்மால், நிரோஷன் திக்வெல்ல, நுவன் பிரதீப், குசல் மெண்டிஸ் ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.

அத்துடன் லஹிரு திரிமான்ன, சாமர கப்புகெதர, சீக்குகே பிரசன்ன, திசர பெரேரா, மிலந்த சிறிவர்தன, துஷ்மன்த சமீர, அக்கில தனஞ்செய, விஷ்வா பெர்னாண்டோ, ஜெவ்றி வெண்டர்சே ஆகியோரும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானும் இலங்கையும் இதுவரை 148 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளன. பாகிஸ்தான் 85 க்கு 58 ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கின்றது. எனினும் இந்தத் தொடரில் இலங்கை சாதிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

(Visited 62 times, 1 visits today)

Post Author: metro