அப்பா பார்த்தால் என்ன நினைப்பார்? – டொப்லெஸ் படம் குறித்து ரசிகர் கேள்வி நடிகை இஷா குப்தா சூடான பதில்

‘யார் இவன்’ படத்தில் நடித்தவர் இஷா குப்தா. இந்தியில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

பட வாய்ப்புகளுக்காகவும், ரசிகர்களின் கவனத்தைக் கவர்வதற்காகவும் தனது இணையத்தள பக்கத்தில் டொப் லெஸ் படங்களை வெளியிட்டு வருகிறார்.

சிலர் அவரது தோற்றத்தை ரசிப்பவர்களாக இருந்தாலும் வேறு சிலர் அவரைக் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

சமீபத்தில் விமானப் படை தினம் நடந்தது. நாட்டைக் காக்கும் விமான படைக்கு சல்யூட் செய்வதாகத் தெரிவித்திருந்த இஷா, ‘நான் ஒரு விமானப் படை அதிகாரியின் மகள் என்பதை எண்ணி பெருமைப்படுகிறேன்.

சினிமாவுக்கு அப்பாற்பட்டு உண்மையான ஹீரோக்கள் விமானப் படை வீரர்கள்தான்’ என குறிப்பிட்டிருந்தார்.

இஷாவின் இந்தப் பதிவை பார்த்த ரசிகர் ஒருவர், ‘விமானப் படை அதிகாரியின் மகள் என்கிறீர்கள், அப்படியிருந்தும் எதற்காக உடலழகை ஆபாசமாகக் காட்டும் படங்களை வெளியிடுகிறீர்கள்.

அப்படி வெளியிடுவது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம்தான். அதேசமயம் அந்த ஆபாச புகைப்படங்களை உங்கள் தந்தை பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்’ என குறிப்பிட்டிருந்தார்.

ரசிகருக்கு பதில் அளித்த இஷா, ‘நண்பரே, அதை உணர மறந்துவிட்டேன். உங்களுடைய அட்வைஸ் என் கண்களைத் திறந்துவிட்டது. நான் விழித்துக் கொண்டேன்’ என குறிப்பிட்டி ருக்கிறார்.

தனது கவர்ச்சியான படங்களைப் பார்த்து கிண்டலடித்து வெறுப்பூட்டுபவர்களுக்கு தான் பதில ளிக்கும் வழி மேலும் அத்தகைய படங்களை வெளியிடுவதுதான் என இஷா குப்தா கூறியுள்ளார்.

“என்னை பிடிக்காவிட்டால் என்னைப் பின்தொடராதீர்கள். என்னை ப்ளொக் செய்துவிட்டு போங்கள். அது மிகவும் சுலபமானது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 137 times, 1 visits today)

Post Author: metro