சுதந்திரப் பிரகடனத்தை கைவிட கத்தலோனியாவுக்கு 8 நாள் அவகாசம்

கத்­த­லோ­னியா சுதந்­திரப் பிர­க­ட­னத்தைக் கைவிட 8 நாட்கள் அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. தவ­றினால் கத்­த­லோ­னி­யாவின் தன்­னாட்சி அதி­காரம் இடை­நி­றுத்­தப்­பட்டு அந்தப் பிராந்­தியம் மத்­திய அரசின் நேரடி ஆட்­சியின் கீழ் கொண்­டு­வ­ரப்­படும் என ஸ்பெயின் பிர­தமர் மரி­யானோ ரஜோய் கூறி­யுள்ளார்.

இது குறித்து நாடா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய ரஜோய் எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை (16ஆம் திகதி) வரை அதற்கு அவ­காசம் வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­வித்­துள்ளார்.

ஸ்பெயின் பிர­த­மர் 

ஸ்பெயி­னி­லி­ருந்து கத்­த­லோ­னியா சுதந்­திரம் பெற்­று­விட்­ட­தாக அதன் ஜனா­தி­பதி புயிக்மொன்ட் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சூச­க­மாக அறி­வித்தார்.

ஆனால், மெட்ரிட் அர­சுடன் பேச்சு நடத்­து­வ­தற்­காக அதை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை அவர் தள்ளி வைத்­துள்ளார்.

எனவே, உண்­மை­யி­லேயே சுதந்­திரப் பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்­ளதா என உறு­திப்­ப­டுத்­து­மாறு மரி­யானோ ரஜோய் கத்­த­லோ­னிய ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை ஒன்றை முன்­வைத்­துள்ளார்.

இந்த நிலையில் ஸ்பெயின் பிர­த­மரின் கோரிக்­கைக்கு ஆம் என பதி­ல­ளித்தால் இந்த நெருக்­க­டியில் மத்­திய அரசு தலை­யிடும். இல்­லை­யென அறி­வித்தால் தீவிர இட­து­சாரி கட்சி கத்­த­லோ­னிய அர­சுக்­கான தனது ஆத­ரவை விலக்கிக் கொள்ளும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

மேலும், பிர­தமர் ரஜோய் திடீர் தேர்தல் ஒன்றை நடத்தி கத்­த­லோ­னிய அரசைக் கலைத்­து­வி­டவும் வாய்ப்பு உள்­ளது.

ஸ்பெயி­னி­லி­ருந்து கத்­த­லோ­னியா சுதந்­திரம் பெறு­வதைத் தீர்­மா­னிக்க இந்த மாதம் முதலாம் திகதி அங்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது.

அதில் பெரு­ம­ள­வான மக்கள் சுதந்திரத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர் இதைத் தொடர்ந்து சுதந்திரப் பிரகடனம் செய்யப்போவதாக கத்தலோனிய ஜனாதி பதி கூறியமை குறிப்பிடத்தக்கது.

(Visited 77 times, 1 visits today)

Post Author: metro