2014: 24 வரு­டங்­களின் பின் யாழ்ப்­பாணம் வரை­யான யாழ் தேவி ரயில் சேவை மீண்டும் ஆரம்­ப­மா­கி­யது

வரலாற்றில் இன்று…
ஒக்டோபர் – 13

 

54 : ரோமப் பேர­ரசன் குளோ­டியஸ், நஞ்­சூட்டிக் கொல்­லப்­பட்­டதை அடுத்து அவனின் மனைவி மூலம் பிறந்த வளர்ப்பு மகன் நீரோ ரோமப் பேர­ர­ச­னானான்.

1582 : கிற­கோ­ரியின் நாட்­காட்டி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து இத்­தாலி, போலந்து, போர்த்­துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடு­களில் புதிய நாட்­காட்­டியில் இவ்­வாண்டின் இந்நாள் இடம்­பெ­ற­வில்லை.

1792 : வெள்ளை மாளி­கைக்­கான அடிக்கல் வொஷிங்டன், டிசியில் நடப்­பட்­டது.

1884 : சர்­வ­தேச நேரம் கணிக்கும் இட­மாக இலண்­டனில் உள்ள “கிறீன்விச்” தெரிவு செய்­யப்­பட்­டது.

1923 : துருக்­கியின் தலை­நகர் இஸ்­தான்புல் நக­ரி­லி­ருந்து அங்­கா­ரா­வுக்கு மாற்­றப்­பட்­டது.

1943 : ஜேர்­ம­னிக்கு எதி­ராக புதிய இத்­தா­லிய அரசு போர்ப் பிர­க­டனம் செய்­தது.

1944 : இரண்டாம் உலகப் போரில் லாத்­வி­யாவின் தலை­நகர் ரீகா சோவி­யத்தின் செஞ்­சே­னை­யினால் கைப்­பற்­றப்­பட்­டது.

1946: பிரான்ஸில் நான்­கா­வது குடி­யரசு அர­சி­ய­ல­மைப்பு அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது.

1970 : ஐ.நாவில் பிஜி இணைந்­தது.

1972 : ரஷ்­யாவின் மொஸ்கோ நக­ருக்கு அருகில், வெளியில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்­கி­யதில் 174 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1972 : உரு­குவே விமானம் ஒன்று ஆர்­ஜென்­டீ­னா­வுக்கும், சிலிக்கும் இடையில் அந்தீஸ் மலை­களில் டிசம்பர் 23 ஆம் திகதி மோதியதில் 45 பேர்­களில் 16 பேர் மட்டும் மீட்­கப்­பட்­டனர்.

1976 : பொலீ­வி­யாவைச் சேர்ந்த சரக்கு விமானம் ஒன்று பொலீ­வி­யாவின் சாண்டா குரூஸ் நகரில் வீழ்ந்­ததில் தரையில் நின்ற 97 பேர் (பெரும்­பா­லானோர் குழந்­தைகள்) உட்­பட 100 கொல்­லப்­பட்­டனர்.

1990 : லெபனான் மீது சிரியப் படைகள் தாக்­கு­தலை ஆரம்­பித்­தன.

2010 : சிலி சுரங்க விபத்­தொன்றில் சிக்­கிய, 33 தொழி­லா­ளர்கள் 69 நாட்­க­ளின்பின் மீட்­கப்­பட்­டனர்.

2013 : இந்­தி­யாவின் மத்­திய பிர­தேச மாநி­லத்தில் பால­மொன்­றுக்கு அருகில் ஏற்­பட்ட சன நெரி­சலில் சிக்கி 115 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2014 : 1990 ஆம் ஆண்டு முதல் யாழ் தேவி ரயில் சேவை வவு­னியா வரை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், இந்திய உதவியுடன் ரயில் பாதை நிர்மாணிக்கப்பட்டதையடுத்து 24 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் வரையான யாழ் தேவி ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

(Visited 55 times, 1 visits today)

Post Author: metro