மருமகனுடன் தினமும் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்த மனைவியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த கணவர்; சோகத்தில் கணவனும் தற்கொலை முயற்சி

தனது மருமகனுடன் தினமும் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்த மனைவியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த கணவர் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து நுங்கம்பாக்கம் பொலிஸார் தெரிவித்துள்ளதாவது, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). கூலித்தொழிலாளியான இவருக்கு லட்சுமி (வயது 45) என்ற மனைவி, இரண்டு மகளும் ஒரு மகனும் உள்ளனர். லட்சுமி அருகிலுள்ள குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

மூத்த மகள் பவானிக்கு (வயது 21) கடந்த 2 ஆண்டுக்கு முன்பு தங்கராஜ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு தங்கராஜ் அடிக்கடி மாமியார் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். மாமனார் சீனிவாசன் கூலி வேலைக்குச் சென்று விட்டு இரவு நீண்ட நேரம் கழித்து தான் வீட்டுக்கு வருவதால் மாமியார் லட்சுமிக்கு பல விதங்களிலும் உதவி புரிந்து வந்துள்ளதுடன் மாமியாருடன் தங்கராஜ் சகஜமாக பேசி பழகியுள்ளார்.

அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கராஜ், சீனிவாசன் இல்லாத சமயம் பார்த்து அவரது வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது லட்சுமிக்கும் மருமகன் தங்கராஜூக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பலமுறை தனியாக உல்லாசம் அனுபவித்துள்ளனர். ஒருகட்டத்தில் இருவரும் வெளியூர்களுக்கு சென்று வந்துள்ளனர்.

இதனால் அப்பகுதியினருக்கு சந்தேகம் வந்துள்ளது. மாமியார், மருமகன் நடவடிக்கையை அக்கம்பக்கத்தினர் சீனிவாசனிடம் கூறியுள்ளனர்.

ஆனால், சீனிவாசன் இதை நம்பவில்லை. ஒரு சமயம் மனைவியை சீனிவாசன் உறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்துள்ளதையடுத்து, மனைவி லட்சுமி மீது சீனிவாசனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து லட்சுமியிடம் கணவர் கேட்டபோது இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இருவரும் கள்ளத்தொடர்பை நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் சீனிவாசன் வேலைக்கு சென்றுள்ளார். இதை அறிந்த தங்கராஜ், மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், சீனிவாசன் திடீரென வீட்டுக்கு வந்துள்ளார்.

உள்ளே இருவரும் ஒன்றாக இருப்பதை கண்டு சீனிவாசன் அதிர்ச்சியடைந்துள்ளார். சீனிவாசன் வந்ததை கண்டுவிட்ட தங்கராஜ் உடனே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன்பிறகு கள்ளத்தொடர்பு குறித்து இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி அது சண்டையாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சீனிவாசன் வீட்டிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து லட்சுமியின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.

தொடர்ந்து ஆத்திரம் தீராமல் லட்சுமியின் கை, கால், முதுகு உள்ளிட்ட பல இடங்களில் சீனிவாசன் கத்திரிக்கோலால் குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உடனே, சோகம் தாங்க முடியாமல் மனைவியை குத்தி கொன்ற கத்திரிக்கோலால் தனக்கு தானே குத்தி சீனிவாசன் தற்கொலைக்கு முயன்றபோது அவர் வலி தாங்க முடியாமல் கத்தியுள்ளார். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர்.

உடனே இதுகுறித்து நுங்கம்பாக்கம் பொலிஸாருக்க தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொலிஸார் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சீனிவாசனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அதைதொடர்ந்து உயிரிழந்த லட்சுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பொலிஸார் சீனிவாசனை கைது செய்துள்ளனர். இதன்போது, தனது மனைவி மருமகனுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதை நேரில் கண்டதால் கொலை செய்ததாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, சீனிவாசனை சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

(Visited 980 times, 1 visits today)

Post Author: metro