மேர்வினின் மகன் மாலக நீதிமன்ற உத்தரவை மீறி இரவு களியாட்ட விடுதிகளுக்கு சென்றாரா?-விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்க சி.சி.டி.க்கு நீதிவான் உத்தரவு

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்­வாவின் மகன் மாலக சில்வா இரவு நேர களி­யாட்ட விடு­தி­க­ளுக்கு செல்லக் கூடாது என பிணை நிபந்­தனை விதித்­தி­ருந்த நிலையில் அதனை அவர் மீறி­னாரா என விசா­ரணை செய்து அறிக்கை சமர்­பிக்­கு­மாறு கொழும்பு பிர­தான நீதிவான் லால் ரண­சிங்க பண்­டார கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வுக்கு (சி.சி.டி.) நேற்று உத்­த­ரவு பிறப்­பித்தார்.

 

இரவு நேர களி­யாட்ட விடுதி ஒன்றில் பிரித்­தா­னிய தம்­ப­தி­யி­னரை தக­கிய விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்த போதே இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்ப்ட்­டது.

இந்த விவ­காரம் தொடர்­பி­லான வழக்கில் மாலக சில்­வா­வுக்கு பிணை வழங்­கும்கும் போது அவர் எக்­கா­ரணம் கொண்டும் இரவு நேர களி­யாட்ட விடு­தி­க­ளுக்கு செல்லக் கூடாது என தடை விதிக்­கப்­பட்­டது.

இந் நிலையில் அந்த தடை உத்­த­ரவு மீறப்­பட்­டுள்­ள­தா­கவும் மாலக சில்வா இரவு நேர களி­ய­டட விடு­தி­க­ளுக்கு செல்­வது தொடர்பில் தம்­மிடம் ஆதாரம் இருப்­ப­தா­கவும் பாதிக்­கப்­பட்ட பிரித்­தா­னிய தம்­ப­தி­யி­னரின் சட்­டத்­த­ர­ணிகள் நேற்று நீதி­வானின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­தனர்.

இந்­நி­லை­யி­லேயே நீதி­மன்றின் உத்­தர்வை மாலக சில்வா மீறி­யுள்­ளாரா என்­பது குறித்து உட­ன­டி­யாக விசா­ரணை செய்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வுக்கு நீதிவான் லால் ரண­சிங்க பண்­டார உத்­த­ர­விட்டார். அதன்படி இது தொடர்பிலான வழக்கு அடுத்த வருடம் மார்ச் மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

(Visited 46 times, 1 visits today)

Post Author: metro