5 பெண்களின் பாலியல் குற்றச்சாட்டுகளினால் பி.பி.சி. அறிவிப்பாளர் இடைநிறுத்தம்

லண்டன் பிபிசி வானொலி அறி­விப்­பாளர் ஜோர்ஜ் ரிலே, சக பெண் உத்­தி­யோத்­தர்­க­ளுக்கு பாலியல் தொந்­த­ரவு கொடுத்தார் என்ற முறைப்­பா­டுகள் கார­ண­மாக பணி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ளார்.


பிபி­சியில் பணி­யாற்றும் பெண்கள் சில­ருக்கு ஆண் உத்­தி­யோகத்­தர்கள் இருவர் பாலியல் தொந்­த­ரவு கொடுத்­தனர் எனும் குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக பிபிசி கூட்­டுத்­தா­பன அதி­கா­ரிகள் விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர்.

இந்­நி­லையில், அறி­விப்­பாளர் ஜோர்ஜ் ரிலே கடந்த வாரம் பணி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ளார்.

 

39 வய­தான ஜோர்ஜ் ரிலே பிபி­சியின் ரேடியோ–5 அலை­வ­ரி­சையில் காலை­நேர நிகழ்ச்­சியின் மூலம் பிர­ப­ல­மா­னவர்.

அவர் மீது குறைந்­த­பட்சம் 5 பெண்கள் பாலியல் தொந்­த­ரவு குற்­றச்­சாட்டு சுமத்­தி­யுள்­ளனர் என பிரித்­தா­னிய ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

பிபிசி அதி­கா­ரி­க­ளினால் விசா­ரிக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­படும் இரண்­டா­வது ஆண் உத்­தி­யோ­கத்­தரின் பெயர் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

சம்­பள முரண்­பா­டுகள் தொடர்­பான சர்ச்­சை­க­ளுக்கு மத்­தியில் பிபி­சியில் பணி­யாற்றும் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள், முகா­மை­யா­ளர்­க­ளான பெண்­களால் BBCWomen எனும் குழு ஸ்தாபிக்­கப்­பட்­டது.

இக்­கு­ழு­வின் ஊக்­கு­விப்­பினால் மேற்­படி பெண்கள் துணிச்­ச­லாக பாலியல் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சிரேஷ்ட ஊட­க­வி­யா­லாளர்கள் விக்­டோ­ரியா டேர்­பி­ஷயர், மிஷல் ஹுசைன் ஆகி­யோரும் மேற்­படி BBCWomen குழுவில் அங்கம் வகிக்­கின்­றனர்.

இதே­வேளை, பிசிசி செய்­தி­யாளர் ராஜினி வைத்தி­ய­நாதன், தான் சக ஊழி­யர்கள் மூவரால் தொந்­த­ர­வுக்­குள்­ளா­ன­தாக தெரி­வித்­தி­ருந்தார்.

தொந்­த­ர­வுகள், வெருட்­டல்­களால் பாதிக்­கப்­பட்ட பெண்கள் முன்­வந்து குற்­றச்­சாட்­டு­களை தெரி­விக்­கு­மாறு பிபி­சியின் பிரதி பணிப்­பாளர் நாய­க­மான ஆன் புல்ஃபோர்ட் பிபிசி ஊழி­யர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்ளார்.

‘உங்­களை பாது­காப்­பது எமது கடமை. இதை தீவி­ர­மாக கருத்­திற்­கொள்­கிறோம். சுமத்­தப்­படும் குற்­றச்­சாட்­டுகள் குறித்து நாம் தொடர்ந்தும் தீவி­ர­மாக செயற்­ப­டுவோம்’ என பிபிசி ஊழி­யர்­க­ளுக்கு அனுப்­பிய மின்­னஞ்சல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

(Visited 123 times, 1 visits today)

Post Author: metro