கைது செய்யப்பட்ட யுவதிக்கு கைவிலங்கிட்டு பொலிஸ் வாகனத்தில் வல்லுறவுக்குட்படுத்திய நியூயோர்க் பொலிஸ் உத்தியோகத்தர்கள்

யுவ­தி­யொ­ரு­வ­ருக்கு கைவி­லங்­கிட்ட நிலையில் அவரை பொலிஸ் வாக­ன­மொன்­றுக்குள் வைத்து பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் நியூயோர்க் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இரு­வ­ருக்கு குற்றப் பத்­திரம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

நியூயோர்க் பொலிஸ் திணைக்­க­ளத்தைச் சேர்ந்த புல­னாய்வு உத்­தி­யோ­கத்­தர்­க­ளான ரிச்சர்ட் ஹால் மற்றும் எட்வர்ட் மார்ட்­டினஸ் ஆகியோர் கடந்த செப்­டெம்பர் 15 ஆம் திகதி இக்­குற்­றத்தை புரிந்த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

போதைப்­பொருள் குற்­றச்­சாட்டு தொடர்பில் 18 வய­தான யுவ­தி­யொ­ரு­வரை கைது செய்து, அவ­ருக்கு கைவி­லங்­கிட்டு பொலிஸ் வேனில் ஏற்­றிய நிலையில், மேற்­படி உத்­தி­யோ­கத்­தர்கள் அந்த யுவ­தியை வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாக புரூக்ளின் உயர்நீதி­மன்­றத்தில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட யுவ­தியும் நியூயோர்க் பொலி­ஸா­ரிடம் 5 கோடி டொலர் சுமார் 767 கோடி ரூபா) நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடுத்­துள்ளார். இந்­நி­லையில், மேற்­படி பொலிஸ் உத்­தி­யோத்­தர்கள் இரு­வரும் சேவை­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக நியூயோர்க் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

(Visited 125 times, 1 visits today)

Post Author: metro