இன்னும் ஒருவர் கூட ‘ஐ லவ் யூ’ சொன்னதில்லை – ஹரீஷ் கல்யாண்

‘சிந்து சம­வெளி’ படத்தில் சுமா­ரான கெரக்­ட­ரில்தான் அறி­மு­க­மானார் ஹரீஷ் கல்யாண். அடுத்து ‘அரிது அரிது’, ‘சட்­டப்­படி குற்றம்’, ‘சந்­த­மாமா’ என்று நடித்து தன்­னு­டைய இடத்தை தமிழ் சினி­மாவில் தக்­க­வைக்க பெரும் போராட்டம் நடத்­தினார். வெற்­றி­மாறன் தயா­ரிப்பில் நடித்த ‘பொறி­யாளன்’ படம்தான் இவரை கவ­னிக்க வைத்­தது.

அடுத்து இயக்­குநர் சுசீந்­திரன் தயா­ரிப்பில் ‘வில் அம்பு’ மூலம் தன்­னு­டைய இடத்தை தக்க வைத்துக் கொண்டார். தொடர்ச்­சி­யாக ‘கன்னி வெடி’, மீண்டும் சுசீந்­திரன் தயா­ரிப்பில் ஒரு படம் என்று பிஸி­யாகி இருக்­கிறார். இடையில் சின்­னத்­திரை நிகழ்ச்சி ஒன்றின் மூல­மாக பட்­டி­தொட்­டி­யெங்கும் அறி­யப்­பட்­டு­விட்டார்.

நீங்கள் சினி­மா­வுக்கு வந்து ஏழு ஆண்­டுகள் ஆகின்றன. இன்னும் குறிப்­பி­டத்­தக்க உய­ரத்தை எட்­ட­வில்லை என்று தோன்­று­கி­றதா?

ஐந்து சூப்­பர்ஹிட் கொடுத்தால் என்ன புகழ் கிடைக்­குமோ, அதை ஒரே ஒரு டிவி நிகழ்ச்­சியில் பெற்­றி­ருக்­கிறேன். தமி­ழகம் மட்­டு­மின்றி, இன்று உலகம் முழு­வதும் என்னை அறிந்­தி­ருக்­கி­றார்கள். இந்த நிகழ்ச்­சிக்குப் பிறகு நிறைய படங்­களில் என்னை ஒப்­பந்தம் செய்ய வரு­கி­றார்கள்.

ஆனால், மிகவும் கவ­ன­மாக நான் நடிக்க வேண்­டிய படத்தை தேர்ந்­தெ­டுக்­கிறேன். கடந்­த­காலத் தவ­று­களை மீண்டும் செய்­து­வி­டக்­கூ­டாது என்­பதில் உறு­தி­யாக உள்ளேன்.

மீண்டும் சுசீந்­திரன் உங்­களை ஹீரோ­வாக்கி இருக்­கி­றாரே?
மிகவும் சந்­தோ­ஷ­மாக இருக்­கி­றது. சுசீந்­திரன், ‘வில் அம்பு’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் நான் நடிக்கும் படத்தை தயா­ரிக்­கிறார். ‘டார்லிங் -2’ சதீஷ் சந்­தி­ர­சே­கரன் டைரக்‌ஷன் செய்­கிறார். ெகாலேஜ் முடித்­து­விட்டு பசங்­க­ளோடு இருக்­கிற மாதிரி ஜாலி­யான ஒரு ரோல். கொமடி, ஃப்ரெண்ட்ஷிப், லவ் என கொமர்­ஷியல் பார்­மு­லா­வுக்குள் இருந்­தாலும் ஜானர் வித்­தி­யா­சமாக இருக்கும்.

புகழ்பெற்ற பெரிய இயக்குநர்கள் படத்தில் நடிப்பதற்கும், புதிய இயக்குநர்கள் படங்களில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?
“புது இயக்குநர்கள் படத்தில் நடிக்கும்போது சுதந்திரமாக இருக்க முடியும். புதியவர்கள் என்பதால் ஃப்ரெண்ட்லி அப்ரோச் இருக்கும். ஆனால் பெரிய இயக்குநர்கள் படங்களில் லிமிட் இருக்கும்.”

தோல்­விப்­ப­டங்­களில் இருந்து என்ன பாடம் கற்றுக்கொண்­டீர்கள்?
இந்த ஏழாண்டு அனு­ப­வத்தில் நிறைய கற்­றி­ருக்­கிறேன். சில படங்­களில் பாராட்டும் கிடைத்­தது. தோல்­விதான் பாடங்கள் கற்­பித்­தி­ருக்­கி­றது. வெற்­றிக்கும் அவைதான் ஆதா­ர­மா­கவும் இருக்­கின்­றன. ஆனால், வெற்­றிதான் நமக்­கான அங்­கீ­கா­ரத்தை கொடுக்கும்.

அதே சமயம் தோல்­வி­யையும் மதிப்­பிற்­கு­ரிய ஒன்­றா­கவே பார்க்­கிறேன். ஒன்­றுமே செய்­யா­தவன் தோல்­வியே அடை­ய­ மாட்டான். அவ­னுக்கு வெற்­றியும் கிடை­யாது. நான் செயல்­பட்டுக் கொண்­டி­ருக்­கிறேன் என்­ப­தா­லேயே வெற்றி, தோல்வி இரண்­டையும் திரும்பத் திரும்பப் பார்க்­கிறேன்.

இலக்கு?
வெற்­றிப்­பட நாயகன் என்­பதைத் தாண்டி நல்ல நடிகன் என்று பெயர் வாங்­கணும். நடி­க­னாக மட்­டு­மில்­லாமல், ஆல் ரவுண்­ட­ரா­கவும் ஜொலிக்­கணும். எனக்கு இசை­யிலும் ஆர்வம் உண்டு. சமீ­பத்தில் என்­னு­டைய பிறந்த நாளுக்கு ‘ஐ ஆம் சிங்கிள்’ என்­கிற ஆல்­பத்தை யூடி­யூப்பில் ரிலீஸ் செய்தேன். ‘ஐயம் சிங்கிள் ரெடி டூ மிங்கிள்’ என்ற அந்தப் பாட­லுக்கு சுமார் இரண்டு லட்சம் பார்­வைகள் கிடைத்­தன. இப்­படி, எனக்கு பிடிச்ச விஷ­யங்கள் சினி­மாவில் நிறைய இருக்கு.

நான் நடிக்கும் படங்­களில் ஒரு பாட­லுக்­கா­வது இசை­ய­மைத்து பாடணும் என்ற ஐடியா இருக்­கி­றது. சிங்­கிங்­காக இருந்­தாலும் சரி, கதை எழு­து­வ­தாக இருந்­தாலும் சரி எல்­லாத்­துக்­குமே அடிப்­படை நடிப்பு. அதில் நல்லா ஸ்கோர் பண்­ணினால் மீதி­யெல்லாம் தானாக கைகூடும்.

எந்த மாதிரி படங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் தரு­கி­றீர்கள்?
யதார்த்­த­மாக இருக்க வேண்டும். எனக்கு பொருத்­த­மாக இருக்­கணும். என்­னு­டைய உடல் மொழிக்கு ஏற்ப நான் என்ன பண்­ணினால் மக்கள் ஏற்­றுக்­கொள்­வார்­களோ அந்த மாதிரி ரோலில் நடிக்க விரும்­பு­கிறேன். கதை­யோடும் கெரக்­ட­ரோடும் பொருந்­தாமல் பறந்து பறந்து அடித்தால் கொமடி ஆகி­விடும்.

மீண்டும் ‘சிந்து சம­வெளி’ மாதிரி கதைகள் வந்தால் நடிப்­பீர்­களா?
கண்­டிப்பாக பண்­ண­மாட்டேன். அந்த மாதிரி படங்கள் பண்ணும் போது சர்ச்­சை­களை தவிர்க்க முடி­யாது. இப்­போது எனக்கு லவ்வர் ேபாய் இமேஜ் கிடைத்­

தி­ருக்­கி­றது. அதை­யொட்­டியே படங்கள் பண்ண விரும்­பு­கிறேன். ‘பையா’ மாதிரி பெரிய அளவில் எக்‌ஷன் பட­மாக இல்­லை­யென்­றாலும் சிறி­ய­ள­வி­லான எக்‌ஷன் படங்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுப்பேன்.

உங்­க­ளு­டைய விஷ் லிஸ்ட்டில் இருக்கும் இயக்­கு­நர்கள் யார்?
நிறைய பேர் இருக்­கி­றார்கள். குறிப்­பாக கெளதம் மேனன் சார். ‘நான் மகான் அல்ல’ படம் பார்த்­த­துமே சுசீ சார் டைரக்‌­ஷன்ல ஒரு படத்­தி­லா­வது நடிக்­கணும் என்று முடிவு பண்­ணி­யி­ருக்­கிறேன். நலன் குமா­ர­சாமி, கார்த்திக் சுப்­பு­ராஜ்ன்னு நிறைய பேர் இருக்­காங்க. ஷங்கர், ஏ.ஆர்.முரு­க­தாஸை விட்­டு­டுங்க. அதெல்லாம் பெருங்­க­னவு. என்­னைக்­கா­வது நடக்கும்.

இப்­போது இருக்கும் நடி­கை­களில் யார் உங்­க­ளுக்கு ஃபிட்­டுன்னு நினைக்­கி­றீங்க?
எனக்கு யார் ஹீரோ­யின்னு நான் செலக்ட் பண்ற அளவுக்கு இன்னும் வளரலை சார். ஆனா, கீர்த்தி சுரேஷ் எனக்கு பொருத்தமாக இருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.

அம்சமா இருக்கீங்களே… யாரையாவது லவ் பண்றீங்களா?
அந்தக் கொடுமையை எங்கே போய் சொல்ல பாஸ்? இப்போ எனக்கு நிறைய ரசிகைகள் உருவாகி இருக்காங்க. ஆனா, ஒருத்தர் கூட இதுவரைக்கும் ‘ஐ லவ் யூ’ சொன்னதில்லை. நானா யாரையாவது தேடிப்புடிச்சி தான் லவ் பண்ணணும் போலிருக்கு.

(Visited 92 times, 1 visits today)

Post Author: metro